பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468

தமிழர் வரலாறு



6) “விடர்ச்சிலை பொறித்த வேந்தன்”

-சிலம்பு : கட்டுரை : 825


7)“கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செருவெங் கோலம்.”

- சிலம்பு : காட்சி : 160-165.


8)“விடர்ச்சிலை பொறித்த விறலோன்”

- சிலம்பு : நடுகல் : 186.


9)“குமரியொடு வடவிமயத்து
ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்”

- சிலம்பு : வாழ்த்து உரைப்பாட்டு


10)“முடிமன்னர் மூவரும் காத்து ஒம்பும் தெய்வ
வடபேரிமயம்.”

- சிலம்பு : வாழ்த்து : தேவந்தி சொல்.


11)“இமயத்து
வானவர் மருள மலைவில் பூட்டிய
வானவர் தோன்றல்”

- சிலம்பு : காட்சி : 1.3.


12)“ஓங்கிய
வரை அளந்தறியார் பொன்படு நெடுங் கோட்டு
இமயம் ஒட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன்:”

- புறம் : 39.