பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி; பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

469

 இமய வரம்பன் இமயப் படையெடுப்பு நடைபெறாத் ஒன்று என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்ய வல்ல அகச்சான்று எதுவும் இல்லாத நிலையில், அது போலும் ஒன்றைக் காட்ட இயலாத நிலையில், மேலே எடுத்துக் காட்டியிருக்கும் அடுக்கடுக்கான அகச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அந்நிகழ்ச்சியை உண்மை நிகழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுதான் நல்ல வரலாற்றுத் திறனாய் வாளர்க்கு மதிப்பும் மாண்பும் ஆகும். அது விடுத்து, “குமட்டுர்க் கண்ணனாரின் வடஅரசர்களை, மறந்தமக்கடந்தது”, ஒரே தலைமுறையில் வேந்தரைப்பிணித்ததாக வளர்ந்து விட்டது’ என்றும், நெடுஞ்சேரலாதன் தந்தை வானத்தையே நாட்டு எல்லையாகக்கொண்டு ‘வானவரம்பன்’ ஆகிவிட்டான் : அவன் மகனோ இமயத்தையே நாட்டு எல்லையாகக் கொண்டு, இமயவரம்பன் ஆகிவிட்டான்’ என்றும், [Kumattur Kannanar, “quested the valour” of the Northern kings, hasin one generation, grown into “trussed them up.” Neidunjeral’s father was “Vanavaramban”, one who had the sky as his boundary,” and the son became, “Imayavaramam”, one who had the Himalayas as his boundary” Page : 504 Foot Note] என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடுவதை, வரலாற்றுத் திறனாய்வுக்குத் தகுதி அற்றவர் செய்யலாம். ஆனால் திருவாளர், அய்யங்கார் போலும், முதிர்ந்த வரலாற்றுத் திறனாய்வாளர், அது செய்தல் வியப்பிற்கு உரியதாம்.

மேலே காட்டப் பெற்றிருக்கும் அகச்சான்றுகளில், ஏழு முதல், பதினொன்று வரையான அகச்சான்றுகள் ஆறும், திருவாளர் பி, டி. எஸ். அவர்கள் கூற்றுப்படி, இளங்கோவடிகளரால் பாடப்படத. [The Silappadigarm is a double poem, each poem by a different author, can to I and II being a splendid romantic poem and canto III being a