பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

470

தமிழர் வரலாறு

 legend about a mythical hero’s exploits : Page : 606] சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாத, வஞ்சிக் காண்டத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டவை. ஆகவே, வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல என ஒதுக்கி விடல் கூடும். ஆனால், திருவாளர் அய்யங்கார் அவர்களால், சிலப்லதிகாரத்தின் ஒரு பகுதியாய் இளங்கோ வடிகளாரால் பாடப்பெற்றது என ஏற்றுக் கொள்ளப்பட்ட மதுரைக்காண்டத்துக் காதைகளாகிய ஆய்ச்சியர் குரவை, கட்டுரைக் காதைகளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டிருக்கும், ஐந்து, ஆறு அகச்சான்றுகளை அவ்வாறு தள்ளிவிடுதல் இயலாது : கூடாது.

மூன்று என்ற எண்ணிட்ட அகச்சான்று, பதிற்றுப்பத்துப் பாடிய புலவர்களால் பாடப்பட்டது அன்று : அப்பதிற்றுப் பத்துக்களைத் தொகுத்த பிற்பட்ட காலத்தவரால் பாடப் பெற்ற பதிகத்தில் காணப்படுவது, என்ற காரணம் காட்டி, அதை ஏற்க மறுத்து விடலாம். ஆனால், [The poets of Tenfold Ten were Brahmanas of the V or VI century A. D. Hence the poems team with references to Asyan ideas and Agama practices and therefore must have been composed after the Agama temple worship had spread in the land.” Page: 495.495.] எனக்கூறிவிட்டு, தம் கூற்றினை உறுதி செய்யப் பதிற்றுப் பத்திலிருந்து அடுக்கடுக்கான அகச் சான்றுகளைத் தம்முடைய நூலின் 486, 497, 498, 499 பக்கங்களில் எடுத்துக் காட்டியிருப்பதன் மூலம், இரண்டாம் பத்தின் ஆசிரியராக ஏற்றுக் கொண்டுவிட்ட குமட்டுர்க் கண்ணனார் கூறிய நான்காம் எண் அகச்சான்றினை ஏற்க மறுப்பது, முன்னுக்குப்பின் முரணான வாதமாகும்:

தொகை நூல்களில் அகநானூறே முதற்கண் தொகுக்கப் பட்டதாம் [Of these anthologies, the Agam four hundred seem to have been the earliest to be collected togather” Page: 156] என்ற நற்சான்றினைத் தந்து விட்ட நிலையில், அவ்வக