பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

475

 மாணவர் பனிரண்டாயிரவரோடும், மைசூர் மாநிலத்தில் சரவண பெல்கோலாவுக்கு வந்து சேர்ந்தான்-In the lest quarter of the IV century B. C. Chandraguptha became a jain ascetic and one of 12000 disciples of Bhadrabahu, he trudged on foot along with his master and fellow disciples to Saravanabelgola in Mysore Province”(Page : 141-142) என்றும் கூறியுள்ளார்.

கி. மு. நான்காம் நூற்றாண்டில், இமயச் சாரலில் வழங்கும் மொழியைக் குமரி முனையில் வாழ்வார் புரிந்து கொள்ளவும், இந்தியா முழுவதும் ஒரே வகை எழுத்தைப் பயன்படுத்தப் பெறவும் கூடிய அளவு, அம்மக்களிடையே நெருக்கமான தொடர்பு இருந்தது : தென்கோடிப் பாண்டிய நாட்டு வாணிகப் பண்டங்கள் ஏற்றப்பட்ட கட்டை வண்டிகள், வடக்கே கங்கைக் கரையில் உள்ள பாடலிக்கு வரிசை வரிசையாகச் சென்று வந்தன . ஆயிரமாயிரம் மக்கள், கங்கைக் கரையிலிருந்து, காவிரிக்கரைக் கர்நாடக நாட்டுச் சரவண பெல்கோலாவுக்குக் கால்நடையாக வந்து சேர்ந்தனர்; இமயம் முதல் குமரி வரை நடைபெற்ற வாணிக வளத்தையும், பாண்டிய நாட்டையும் மெகஸ்தனிசும் அறிந்திருந்தான் என்பனவற்றை ஒப்புக் கொண்டு, அதற்குக் கெளடல்யரின் அர்த்த சாஸ்திரத்தை ஆதாரமாகவும் கொண்டுள்ளார், திருவாளர் அய்யங்கார் அவர்கள். -

கி. மு. நான்காம் நூற்றாண்டில், பாடலிக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையில், ஆயிரம் ஆயிரம் கட்டை வண்டிகளில் வாணிகம் நடைபெற்றது எனக்கூறும் வடஇந்தியக் கெளடல்யர், இந்திய நாட்டு நில இயல் அறிந்தவராக, இந்திய நாட்டுவரலாறு தெரிந்தவராகப் புலப்படுகிறார் திரு. அய்யங்கார் அவர்களுக்கு !

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், 12000 சமணத் துறவிகள் கங்கைக் கரையிலிருந்து காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தனர் எனக் கூறுபவர், இந்திய நாட்டு நிலஇயல்