பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

தமிழ்ர் வரலாறு

 அறிந்தவராக, இந்தியநாட்டு வரலாறு உணர்ந்தவராகப் புலப்படுகிறார்: திரு. அய்யங்கார் அவர்களுக்கு !

கி.மு. 400, கி.மு. 300 ஆண்டுகளில், இத்துணைப்பெரிய போக்குவரத்து இருந்திருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது, கி. பி. 600ல், அது பெருகியிருக்கவே செய்யும், மேலும் எளிதாகி இருக்கவும் கூடும். உண்மை நிலை அதுவாக இருக்க வேண்டியிருக்கவும், கி. பி. 600 ல், செங்குட்டுவன், சேரநாட்டிலிருந்து கங்கைக் கரைக்குச் சென்றான் என்றால், அது கூறும் தமிழ்ப் புலவர்கள், இந்திய நாட்டு நில இயல் அறியாதவர் ; இந்திய நாட்டு வரலாறு உணராதவர் ! என்ன கணிப்போ இது ?

கி. மு. 400, கி. மு. 300ல், தமிழ் நாட்டிற்கும் வட நாட்டிற்கும் இடையில், அரசியல், வாணிகத் தொடர்புகள் இருந்தன எனக்கூறுபவர் கூற்று, வேதவரக்கு! ஆனால் ஆயிரம் ஆண்டு கழித்து, கி. பி. 600 ல், அவை இருந்தன எனக்கூறுவார் கூற்று வெறும் கட்டுக்கதை திரு. அய்யங்கார் அவர்களின் இம் முடிவு, அவர் கூற்றுப்படி, பழிவாங்கும் உணர்வோடு கூடிய வெறும் கற்பனைமாடம்! (Speculation with a vengence. Page : 138. )

செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு, நடவாத ஒன்று: வெறும் கட்டுக்கதை என்பதற்குத் திரு, அய்யங்கார் காட்டும் பிறிதொரு காரணம், அவன் வெற்றி கொண்ட அரசர்கள், உண்மையில் இருந்தவர் என்பதற்கு வேறு இலக்கியச் சான்றோ, கல்வெட்டுச் சான்றோ இல்லை என்பது.

நூற்றாவர் கன்னர் துணையால், கங்கையைக் கடந்து, வடகரை அடைந்து, உத்தர நாட்டில் பாசறை கொண்டிருந்த செங்குட்டுவன், அங்கு வந்து எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தான், சிவேதன், கனகன், விசயன் ஆகிய வடநாட்டு மனனர்களை வெற்றி கொண்டான் எனக்கூறுகிறது கால்கோள் காதை,