பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முத்திய எஞ்சிய இலக்கியங்கள்

477


“கங்கைப் பேரி பாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி
ஆங்கு அவர் எதிர் கொள அந்நாடு கழிந்து, ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப்,
பகைப்புலப் புக்குப் பாசறை இருந்த
தகைப்பருந்தானை மறவோன் தன்முன்
உத்தரன், விசித்திரன், உருத்திரன். பைரவன்,
சித்திரன, சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவரெல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் எனக்,
கலந்த கேண்மையின் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர’

-கால்கோள் : 175-187,

இம் மன்னர்கள், கங்கைக் கரையின் வடக்கே அரசாண்டு இருந்தவர் என்பதை வேறு இலக்கியமோ, கல்வெட்டோ உறுதி செய்யவில்லை ; ஆகவே, செங்குட்டுவனின் இப்படை யெடுப்பு ஒருகட்டுக்கதை என்கிறார் திரு அய்யங்கார் அவர்கள்.

“Canto II; then makes Senguttuvan defeat a number of Trans - Gangatic monorchs, for whose existence there is no other evidence, literary or epigraphical. All these must be fables”. (History of the Tamils : Page: 600):

செங்குட்டுவன், இம் மன்னர்களை வெற்றி கொண்டான் என்பதைச் சிலப்பதிகாரச் சான்று உறுதி செய்தாலும், அதை உறுதி செய்ய, வேறு இலக்கியச் சான்று தேவை : கல்வெட்டுச் சான்று தேவை. அவை இல்லாதபோது சிலப்பதிகாரம் கூறுவது உண்மையாக இருக்க முடியாது அது ஒரு வெறும் கட்டுக்கதை எனக்கூறும் திரு. அய்யங்கார் அவர்கள், வட இந்தியச் சீயபாகுவின் மகனும், ஈழத்தில் பெளத்த சமயத்தை'