பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4?8

தமிழர் வரலாறு


பரப்பியவனுமாகிய விஜயன் குறித்து, கி. மு. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப் பெற்ற ஜாதகாக் கதைகள் கூறுவதை, அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் கூறுவன இதோ :

‘ஜாதகா கதைகள், கி. மு. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றவை ; ஆனால், அவை, புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நாடோடிப் பாடல்களால் இருந்து வந்தன.

The Jataka tales Were written down about the IV century B. C., But they must have existed as folk-tales. long before the time of the Buddha” (History of the Tamils. Page : 125.)

புத்தர் இறந்த அன்று, சீயபாகுவின் மகன் விஜயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழு நூற்று வருடன் ஈழத்தில் காலடிவைத்தான் : ஆங்கு வாழ்ந்த யக்கரை அழித்து வென்று, அந்நாட்டின் அரசன் ஆனான். தனக்கும், தன் உடன் வந்தோர்க்கும் மனைவியர் வேண்டித் தக்கிணத்தில் உள்ள மதுரைக்குப் பரிசுப்பொருட்களோடு தக்கவர்களை அனுப்பி வைத்தான்; எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், அணிகள் பல அணிந்து, யானைகள், குதிரைகள், பண்டப்பொதிகள் பின்தொடர ஈழத்திற்குச் சென்றனர். ஜாதகாக்கதைகள் கூறும் இச்செய்தி, பாண்டியர்களும், வட இந்தியர்களும் ஒரு வரையொருவர் அறியாதவரல்லர்; மாறாக, தன் கைப்பற்ற, பாண்டியர் மகளை, விஜயன் கேட்டுப் பெறுமளவு நெருக்க மாக அறிந்திருந்தனர் என்ற உண்மையை உறுதி செய்கிறது’.

“On the day that the Buddha died, Vijaya son of Sihabahu, the armed lion to gether with seven hundred followers landed in Ceylon......He became king of the country after defeating and slaying the Yakk people who lived there and requiring wives for himself and his followers,