பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இமயப் படையெடுப்பு

சேரர், சோழர் வழிவந்தாரைப் போலவே, பாண்டியர் வழிவந்தான் ஒருவனும், இமயப் பெருமலையில் தன் குலச் சின்னமாம் கயலைப் பொறித்தான் என்கின்றன இலக்கியங்கள்.


“வடவாரிய மன்னர் ஆங்கோர்
மடவரலை மாலை சூட்டி
உடன் இருந்த இருக்கை தன்னில்
ஒன்றுமொழி நகையினராய்த்
தென்தமிழ் நாடாளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்றெழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விலங்கு வில் புலி கயல் பொறித்த நாள்
எம்போலும் முடிமன்னர்
ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை
அங்கு வாழ் மாதவர் வந்து அறிவுறுத்த”. -சிலம்பு: வாழ்த்து: உரைப்பாட்டு மடை


2) “வடவாரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவிதன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்’'

-சிலம்பு கட்டுரை: கட்டுரை.