பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 தமிழர் வரலாறு


உணர்ந்ததும், ‘‘கெடுக என் ஆயுள்‘’ எனக் கூறியவாறே, அரசமாதேவியுடன், அரசு கட்டிவிலேயே உயிர் விட்ட பாண்டியன், ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்தான் என்கிறது. இக்கட்டுரை.

இக்கட்டுரைப் பகுதியை எடுத் தாண்டு, இக்கட்டுரையின் ஆசிரியர், ‘‘ஆரியப் படை கடந்த‘’ என்ற தொடருக்கு, வடநாட்டு ஆரியர்களைத் தோல்வி கண்டான் எனப்பொருள் கூறினும், அத்தொடர். கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள பழம்பெரும் போர்க் களமாகிய ஆரியப்படையைக்கடந்து என்றும் பொருள்படும். [Thus the writer of the epilogue interprets the phrase ஆரிய படை கடந்த, as ... having defeated the Northern Aryars”, where as it may also mean having crossed the place called Aryappadai, an ancient battle field near Kumbakonam. Page : 596] என்க் கூறியிருப்பதன் மூலம், அம்முடிவுரையாம் கட்டுரையினைத், திரு. அய்யங்கார் அவர்களே, அகச் சான்றாக ஏற்றுள்ளார் என்பது உறுதி ஆகிறது.

சங்க இலக்கியங்கள். 1) தலையாலங்கானம் (நற். 387, அகம் 36, 175, 209 : புறம் : 19, 23: மதுரைக் காஞ்சி : 121.130), 2) கழுமலம் (அகம் : 44): கூடல் (நற் : 39, 298 ! ஆதம் : 1.16, 253, 346); பாழி (அகம் : 208, 375, 396) வாகை (குறுந் : 293, அகம் : 1.25, 199); வெண்ணி, நற் : 390 ஆதம் 55, 246) என்ற இப்போர்க்களங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன. திரு, அய்யங்கார் அவர்கள் கூறும் ஆரியப்படை என்ற போர்க்களம் ஒன்று இருந்ததற்கான ஆகச்சான்று எதுவும் இல்லை. ஆக, அத்தொகைச்சொல்லை ஆரியருடைய படை என ஆறாம் வேற்றுமைத் தொகைச் சொல்லாகக் கொண்டு பொருள் கொள்வதே நேரிதாம்.

மூன்றும் நான்கும், திரு. அய்யங்கார் அவர்களால், இளங்கோவடிகளாரால் பாடப்பெற்றது என ஏற்றுக் கொள்ளப்பட்ட மதுரைக் காண்டத்தில் - காடுகாண்காதை