பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிகாரம் : XXX
பழமை புதுமைகளின் இணைப்பு

ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்

கி. பி. ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோனால் மீண்டும் ஆட்சிக்கு வரும்வரை, பாண்டியர் ஆட்சி மறைந்தே போய் விட்டது என்ற தவறான கருத்தை அளிப்பதால், பிழைபடு தொடராகக் கருதத்தக்கதான களப்பிரர் இடையீட்டு இருட்காலம் (Kalabbra Interregnum) என்ற, கல்வெட்டுத் துறை வரலாற்று ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சொற்றொடர் இடம் பெற்றிருக்கும் நிலையிலும், அந்த இருண்ட காலத்திலும் பாண்டியச் சிற்றரசர்கள் சிறப்புற வாழ்ந்தே இருந்தனர். புறநானூற்றுச் செய்யுட் கொளுக்கள், பாண்டியர் எழுவரைக் குறிப்பிடுகின்றன. அவற்றைப் பாடிய புலவர்கள், அவர்கள் பாடிய பிற பாடல்களிலிருந்து அவர்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது உணர்த்தப்படும் ஆதலின. அவர்கள் காலத்தால் பிற்பட்டவராவர். மேலும், இதற்கு முந்திய அதிகாரங்களில் ஆராயப்பெற்ற கலித்தொகையும், பிற பாடல்களும் பாண்டியர் தலைவர் சிலரைப் பெயர் கட்டாமலே குறிப்பிடுகின்றன. ஆகவே, அவர்கள், தங்கள் தலைநகர்க்கு அப்பால், ஆட்சி செல்லாச் சிற்றரசர்களாவர் என்று உணரப்படும். களப்பிரர்களைக் கி. பி. 600க்குச் சற்று முன்னர், மதுரை மண்டலத்திலிருந்து விரைந்தோட்டிவிடுவதற்கும். மதுரை மண்டலம் முழுமையும் பாண்டியப் பேரரசை மீண்டும் நிலை நிறுத்துவதற்கும், இந் நிலையே வழி வகுத்திருக்க வேண்டும். ஆறாம் நூற்றாண்டில், சமணர்களும், சைவர்களும், வைஷ்ணவர்களும் , பொது மக்களிடையே செல்வாக்குப் பெறத், தமக்குள்ளே போராடிக்