பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

தமிழர் வரலாறு


[இறையனார் அகப்பொருள் உரை, முதல் சங்கத்தை நிறுவிய 89 பாண்டியரில், எழுவர் கவியரங்கு ஏறினார் என்றும், இடைச்சங்கத்தை நிறுவிய 59 பாண்டியரில் ஐவர் கவியரங்கேறினார் என்றும், கடைச்சங்கம் நிறுவிய 49 பாண்டியரில் மூவர் கவியரங்கேறினார் என்றும் கூறுவதையும் சங்க இலக்கியப் புலவர்களில், அறிவுடை நம்பி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முதலான பன்னிருவர் பாண்டியர் குலத்து வந்தவர் என்பதையும் மறந்து பாண்டிய அரசர்களில் எவரேனும், இதுபோலும் நூல்களை எழுதவல்லவர் என என்னால் நினைக்க முடிய வில்லை என பி. டி. எஸ். அவர்கள் கூறுவது, வியப்பாக உளது.] --மொழி பெயர்ப்பு ஆசிரியர் விளக்கம்.

கோப்பெருஞ் சோழன் :

இச் சோழ மன்னனும், ஆறாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருந்தான். நான் பாடிய 214 ஆம் எண் புறநானூற்றுப் பாட்டில், ஆரிய மதக் கோட்பாடாம் மறுபிறப்பு விவாதிக்கம் பட்டுளது. மேலும், தன் அரசவைப் புலவர்களோடு, சமணத்தில் சல்வேகனம் என அழைக்கப்படும் வழக்கமாம் வடக்கிருந்து உயிர் துறத்தலும் செய்தான். தோல்வியால் பெற்ற இழி வினைத் துடைத்தற் பொருட்டு, ஏனைய அரசர்கள் தங்களைத் தாங்களே கொன்று அழித்துக் கொண்டார்களாக, இவன், உடலோடு வாழலாம் கட்டி விருந்து விடுபட்டுக் கொள்வதற்காக, அவ்வாறு வடக்கிருந்தான;

(மானம் உடைய மாண்பாளர், தமக்கோர் இழுக்கு நேரின், அதன் பின் ஒரு கணப் போதும் உயிர் வாழ மாட்டார். அத்தகையாரை, ‘இளிவரின் வாழாத மானம் உடையார்’ எனப் பாராட்டும் உலகம். கோவலனை ஆராயாதே கொன்று விட்டேன் என்பதை உணர்ந்த அக்கணமே, இயல்பாகவே உயிர் இழந்து, அப்பழி துடைத்துப் புகழ் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் போலத் தமக்கு ஒரு பழி நேர்ந்த