பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

489:


போதே, தம் உயிர் இயல்பாகவே பிரிந்து போய்விடாத போது, அத்தகு மானம் உடையவர், அவ்வுயிரைத் தாமே வருத்திப் போகப் பண்ணி விடுவர்.

பழிக்காம் காரணம் பலவற்றுள், போரில் புறப்புண் பெறுதல் ஒன்றாதல் போல, தானே படையெடுத்துச் சென்று. கொன்று அழிக்க வேண்டுமளவு, பிழை நெறியினராகிய மக்களைப் பெறுதலும், பழிக்காம் ஒரு காரணமாம் ஆகவே, அப் பழிக்கு நாணி, உயிர் விடுதலும், புறப்புண் நாணி உயிர் விடுதல் போன்றதே, கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தது அத்தகையதொரு பழி துடைத்தல் பொருட்டேயல்லது திரு. பி. டி. எஸ். அவர்கள் கூற்றுப்படி, உயிருக்கு உடற்கட்டிலிருந்து விடுதலை அளிக்கும் சமண மரபை ஒட்டியதன்று.] -மொழி பெயர்ப்பாசிரியர் விளக்கம்.

சேர நாட்டில் :

கிரேக்கர்களால், 'தமிரிகே' என அழைக்கப்பட்ட சேர நாடு, ஆரிய ஆதிக்கத்தின் கீழ், ஏனைய தென்னிந்தியா வருவதற்கு முன்பே வந்து விட்டது. ஆகவேதான், சேர அரசர்கள் மீது பாடப்பெற்ற, பாடல்களிலும், பதிற்றுப் பத்திலும், சோழ பாண்டிய நாடுகளைக் காட்டிலும், சேர நாடு, முழுதுமாக ஆரிய மயமாக்கப்பட்டுவிட்டது என்பதற்கான எண்ணிலா அகச் சான்றுகளை நாம் காண்கிறோம்.

கோயில்கள் :

கி. பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர்த், தமிழ் நாட்டில் ஆரியக் கோயில்கள் ஒரு சிலவே ; அல்லது ஒன்று கூட இல்லை. ஆறாம் நூற்றாண்டில், காஞ்சி, வேங்கடம், திருவரங்கம், மதுரை ஆகிய ஈங்குள்ள கோயில்கள் புகழ் பெற்று விட்டதை நாம் அறிகிறோம். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி, தேவாரம், திருவாய்மொழி பாடிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் பல்லவ, சோழ, பாண்டிய, மற்றும் சேர நாடுகளில் உள்ள எண்ணற்ற கோயில்களைப் பாடிப்