பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

தமிழர் வரலாறு


சித்தார்த்தர், ஜீனர்கள் மீது தம்மைப் பின்பற்றுவோர் கொண்டிருந்த தனிப்பட்ட பக்தியையே, தம்முடைய செல்வாக்கிற்குப் பற்றுக்கோடாக் கொண்டிருந்தன. ஆனால், வெகு விரைவில், இத்தனிமனித வழிபாடு, அவர்கள் உள்ளத்தை விட்டு அறவே மறைந்துபோக, அவ்விடம் தத்துவ நெறியின் வாதங்களாம் முடிவுகாணமாட்டா வெறும் வார்த்தைகளால் இடம் கொள்ளப்பட்டது. இச் சமயங்கள், தாம் தோன்றிய சில நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே சீரழிந்து போனமைக்கு இதுவே உண்மைக் காரணம்; மக்களின் அடக்கு முறை அன்று. சமயச் சார்புடைய உணர்விற்கு அடிமைப்பட்டு விட்ட உள்ளத்திற்கு, உணர்ச்சி பூர்வமான அனுபவந்தான் நல்ல உணவாகுமே ஒழிய, வெறும் தத்துவ விளக்க வாதச் சொற்கள் ஆகா. இவ்விரு சமயங்களும், தென்னிந்தியாவில், சைவ, வைஷ்ணவ சமயங்களோடு போட்டியிட்டபோது, அவை, தெய்வத்தன்மை வாய்ந்த அனுபவங்கள் அனைத்தையும் வலிந்து அழித்துவிட்ட, இயற்கையோடு மாறுபடும், கனாநிலைக் கொள்கைகளால் மூடப்பட்டு விட்டன. ஆகவேதான், அவை, தங்கள் ஆன்மாவிற்குள் பாய விட்ட இறைவன் பேரருளாம் என வழி பாட்டாளர்களால் உணரப்பட்ட, வாழவைக்கும் வெள்ளப் பெருக்கை, அவ்வழிபாட்டாளர்கள் உணர்ந்து கொள்ளத் துணைபுரியும், சிவன் விஷ்னு வழிபாட்டின் முன் உருக்குலைந்து போயின ; ஆகவே, பெளத்த சமண சமயங்கள் இடம் அற்றுப் போக, சைவ, வைஷ்ணவ சமயங்கள் வளரலாயின. பெளத்த சமணச்சார்புடைய தமிழ் இலக்கியங்களின் தோற்றம், சில நூறு ஆண்டுகளுக்குள் வற்றிப்போக, கரைகாண மாட்டா வெள்ளம் போலும் சைவ வைஷ்ணவ சமயங்களின் வழிபாட்டு இலக்கியங்கள் உருவாகிப்பெருகின.

காலம் செல்லச் செல்ல, சாணக்கிய, வேதாந்த தத்துவங்கள், சைவ, வைஷ்ணவ சமயங்களுக்குள்ளே ஊடறுத்து நுழைந்து, தமிழில், தத்துவ நூல்களின் தோற்றமாம், ஓர் எதிர் விளைவினைத் தோற்றுவித்துவிட்டது என்பதில் ஐயம் இல்லை ; ஆனால், அச்சமயங்களின் உயிர்