பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

493

நாடியாம், இன்றியமையாப் பண்பு, இத் தத்துவங்களால் பாதிக்கப் படவில்லை விஷ்ணுவும், சிவனும் பொது மக்களின் உள்ளத்தை, எண்ணெய் ஒழுக்குபோல் இடையறவு படாது. தொடர்ந்து ஈர்த்தே வந்தனர்; இச்சமயங்களின், உயிர் ப் பூட்டும் குறிக்கோளும், தானே வந்து பாயும் இறையருள் மூலமாகத் தனிநபர், வீடுபேற்றினை அடைவதாகவே தொடர்ந்து இருந்து வந்தது.

தாம் வணங்கும் தனிப்பெரும் கடவுள் பால் செலுத்தும் எல்லையற்ற வழிபாட்டு நெறி, தமிழ் நாட்டில் ஒரு மைலுக்கு ஒன்றாக, வானளாவ நின்று காட்சிதரும் எண்ணற்ற திருக்கோயில்கள்வழி, உறுதியாக வெளிப்பட்டு நிற்கிறது. தனியொரு கடவுள் பால் செலுத்தும் வழிபாட்டுமுறை, பக்தியை வெளிப்படக்காட்டும் நிலையாம், வழிபாட்டு இசை, வழிபாட்டு ஆடல்களாம் தனிப்பெரும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. தமிழ்நாட்டில், ஆடலும் பாடலும், சமயத்தின் இன்றியமையா நிகழ்ச்சிகளாகப், பண்டு தொட்டே இருந்து வந்துள்ளன. சிவனும் விஷ்ணுவும், வழிபடு கடவுள்களாம் நாயகர்களாக ஆனதும், அவர்கள் தெய்வீக ஆடல் பாடல்களுக்கு உரியவர்களானது மட்டுமல்லாமல், அவற்றில் வல்லவர்களாகவும், சிவன் ஆடலிலும், கிருஷ்ணன் பாடலிலும் வல்லவர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டனர். இதன் விளைவு, தமிழ் நாகரீகம் உள்ளளவும், கலை, சமயத்திலிருந்து பிரிந்து தனிமையுறாது ; சமயச் சார்புடையதாகவே அது தொடர்ந்து இருந்து வரும்.

விஷ்ணு அல்லது சிவன் மீது வெளிப்படுத்தும் நிலை, தமிழகத்தில், தமிழ்ப் பேரரசுகள் பெரும் புகழோடு விளங்கிய, கி. பி. 9, 10 நூற்றாண்டுகளில் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி பெற்றது. தமிழ் வளர்ந்த இக்காலத்தில், பக்தி மார்க்கத்தின் சிறப்பான இத் தமிழ்முறை, தெலுங்கானா மற்றும் செயூன தேசங்களுக்கும் சென்று பரவிற்று : புகழ்பெற்ற பந்தர்பூர பக்திமார்க்கம் எழுந்தது. பிற்காலத்தில், தத்துவார்த்த முறையில், ராமானுஜ மத்துவ மதங்களோடு இணைந்து விட்