பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

503

 நாட்டிலிருந்து வந்தவர்களால், தமிழ் முதன் முதலில் வரி வடிவில் எழுதப்பட்டது எனத்தெரிகிறது.

“Thus so far as the available evidence goes, Tamil was first committed to writing late in the III century or early II century B. C. by foreign emigrants, who were inveterate makers of stone inscriptions. Page : 215.

இவ்வாறெல்லாம் கூறியிருப்பதன் மூலம், கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தமிழ் வரிவடிவம் பெற்றது; தமிழ்ப் பாக்கள் ஏடுகளில் இடம் பெற்றன: என்ற கருத்தையும் திரு. பி. டி. எஸ் அவர்கள் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத் தோற்ற நிலை, உண்மையில் அதுதானா ?

தொல்காப்பியர், தமிழில் எழுத்துக்கள் முப்பது: அகரம் முதல் ஒளகாரம் வரையான பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள். அவற்றில் அ, இ, உ, எ, ஒ என்ற இவ்வைந்து எழுத்தும் ஒரு மாத்திரை அளவுடைய குறில் உயிர்களாம் . ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற இவ்வேழு எழுத்தும், இரண்டு மாத்திரை அளவு ஒலியுடைய நெடில் உயிர்களாம். க முதல் ன வரையான பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாம். அவற்றில் க, ச, ட, த, ப, ற என்ற ஆறும் வல்லோசை உடையன. ங, ஞ, ந, ண, ம, ன என்ற ஆறும் மெல்லோசை உடையன, ய, ர, ல, வ, ழ, ள என்ற ஆறும் இடைநிலையவாய ஒசை உடையன:

எழுத் தென்படுவ
அகரம் முதல் னகர இறுவாய்
முப்ப.து என்ப.’'

(தொல் : எழுத்து : 1.)

ஒளகார இறுவாய்
பன்னிரெழுத்தும் உயிர் என மொழிப

(8) ‘’அவற்றுள்,