பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

தமிழர் வரலாறு


அ, இ, உ,
எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப”
(3)

“ஆ, ஈ, ஊ , ஏ, ஐ,
ஓ, ஒள என்னும் அப்பால் ஏழும் ஈரளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப”
(4)

“னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்து மெய் என மொழி” (9)

“வல்லெழுத்து என் பக, ச, ட, த, ப, ற” (19)

“மெல்லெழுத்து என்ப ங, ஞ, ந, ண, ம, ன” (20)

“இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள” (21)

என எழுத்துக்களின் ஒலி இலக்கணம் உணர்த்திய தோடு அமையாது, சில எழுத்துக்களின் வரிவடிவத்தையும் உணர்த்தி உள்ளார்.

மூன்று புள்ளிகளால் ஆனது ஆய்த எழுத்து “ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி” (2); மெய் எழுத்துக்கள், புள்ளி பெற்று வரவேண்டும், “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15) மேலே பெறும் புள்ளியோடு, உள்ளால் பெறும் புள்ளியையும் பெற்றிருப்பது பகரத்திற்கும். மகரத் திற்கும் இடையே உள்ள வேறுபாடாம், “உட்பெறு புள்ளி உருவாகும்மே;” (14) மெய்யெழுத்து, உயிர் எழுத்தோடு இணைத்த வழி. புள்ளிகளை இழந்துவிடும்; அகர உயி?ராடு சேர்ந்த மெய்கள், புள்ளியிழந்த இயல்பான உருவிலேயே காணப்படும் : ஏனைய உயிர்களோடு இணைந்தவழி, தன் உருவம் திரிந்து காணப்படும்.

“புள்ளி இல்லா எல்லா மெய்யும்

உருவு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்,