பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30 ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு: 2
சங்க இலக்கிய காலம்

‘'பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அறவே அழிந்து போய்விட்டன. தொடக்க நிலைப் பழந்தமிழ்ப் பாக்கள் ஒவ்வொன்றும் ஒருசில அடிகளையே கொண்ட சிறுபாடல்களாதல் வேண்டும் என நாம் கொள்ளலாம். அவற்றிற்குப் பிற்பட்ட காலத்திலும், நீளத்தில் நான்கு முதல் இருபது அல்லது முப்பது அடிகளைக் கொண்ட பாக்கள் மட்டுமே யாக்கப் பெற்றன். [The earliest Tamil literature has alt perished. But we may assume, that the first Tamil poems must have been short odes of a few lines each even much later days, odes varying in length from four to twenty of thirty lines continued to be the only poetry composed. Page : 153.]

இப்போது நாம் பெற்றிருக்கும் பழந்தமிழ்ப் பாக்களின் முன்மாதிரிப் பாக்களுக்குக், கிறிஸ்துவ ஆண்டின் தொடக்கத் திற்கு முற்பட்ட காலம் எதையும் உரிமையாக்க இயலாது [The earliest specimens of Tamil poetry we now possess cannot be assigned to any date much earlier than the beginning of the christian era. Page: 152.]

பண்டைப் பாணர் எவரும் பார்ப்பனர் அல்லர் : பார்ப்பனர்கள், கி. பி. முதல் ஆயிரத்தாண்டின் முற்பாதியின் கடைசி நூற்றாண்டில்தான், அதாவது, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான், தமிழ்ப்பாக்கள் பாடத்தொடங்கினர்.’' (None of the earlier bards (Panar) were Brahmans. The latter began to compose Tamil Poetry in the last century of the first half of the first millenium A.D. Page: 156.]