பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510

தமிழர் வரலாறு


மறந்தனபோக, மறவாதிருந்த பண்டைத் தமிழ்ப் பாக்கள், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும், அதற்குப்பிற்பட்ட நூற்றாண்டுகளிலும் பல்வேறு தொகை நூல்களாகத் தொகுக்கப் பெற்றன.[In the V and latter centuries A. D., all that remained unforgotten of early poetry was collected together in different anthologies. (Page , 155.]

‘பத்துப்பாட்டு, கி. பி. முதல் ஆயிரத்தாண்டின் முற்பாதியின் பிற்பாதியைச் சேர்ந்தது.’ (Pattupattu belongs to the latter half of the first half of the first millennium after christ. (Page : 92)]

சிலபல நூறு அடிநீளமுடையவாகிய பத்துப்பாக்களைக் கொண்ட பத்துப்பாட்டு என்ற தொகை நூல், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முதன் முதலாக வெளிப்படலாயிற்று. ’’ [The odes of Ten Songs (Pattupattu), a few hundreds of lines long, first began to appear in the V century A. D. Page : 153,]

புலவர்களைப் புரக்கும் கரிகாலனின் கொடைவளம் பாராட்டும் பொருநராற்றுப்படை, அவன் சம காலப் புலவர்களுள் ஒருவராகிய முடத்தாமக் கண்ணியாரால் பாடப் பெற்றது.[Porunararruppadai which is a description of Karikal’s pattonage of poets, by one of his protegas, by name Mudattamakknniar, one of karikai’s contemporaries” Page: 336) ‘கரிகாலன் புகழோடு வாழ்ந்த காலம், பெரும் பாலும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியும், ஐந்தாம் ori prairin or Got Lás (plå 4th.” [The most probable period when karikal flourished was the end of the IV and beginning of the V century, the central year of his reg being 400 A. D. Page: 382.]

பத்துப்பாட்டு வரிசையில், காலத்தால் முற்பட்டதும் கரிகாலன் ஆட்சியின் தொடக்க நிலையினைப் பாடுவதுமான பொருநராற்றுப்படை, கி. பி. 400க்குச் சற்றே முற்பட்ட