பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

தமிழர் வரலாறு


கலித்தொகை : இத் தொகை நூலை உருவாக்கும் ஐந்திணைப் பாடல்கள் அனைத்தும் கி. பி. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவை.96). [Kalittogai : The five songs that constitute this collection all belong to the Vi century A. D. Page : 565)].

இவ்வாறெல்லாம் கூறி எட்டுத்தொகைப் பாக்களைக் கி பி. 500க்கும் 600க்கும் இடைப்பட்ட 100 ஆண்டு கால அளவிற்குக் கொண்டுவந்து விட்டார் திருவாளர் அய்யங்கார் அவர்கள்:

பத்துப்பாட்டு எட்டுத் தொகைகளில் இடம் பெற்றிருக்கும் பாக்கள் பாடப்பெற்ற காலத்தையும், அவை தொகை நூல்களாகத் தொகுக்கப்பெற்ற காலத்தையும் இவ்வாறெல்லாம் கணித்துக் கூறியிருக்கும் திருவாளர் அய்யங்கார் அவர்கள் , தம் முடிவிற்கான அடிப்படை எதையேனும் காட்டியுள்ளாரா என்றால் இல்லை, ‘'நம்பலாம். ‘[May assume Page : 153] காணப்படுகிறது [Seem to have beer Page : 156), பெரும்பாலும் இயலக்கூடியது” fMost probable. Page : 158, 382], நான் நினைக்கிறேன்' '[ ஏI think. Page : 1621] நம்பப்படுகிறது’ ‘ (is believed Page . 162), ‘எனக்குத் தெரிந்த வரையில்’ [so far as I known. Page : 583] என்றெல்லாம் தம் கற்பனைகளைத் தான் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

சில அரசர்களை மையமாக வைத்து, அவர்களைப் பாடிய புலவர்களின் காலத்தைக் கணித்திருக்கும் நிலையிலும் சில அரசர்களை மையமாக வைத்துச், சில தொகை நூல்கள் தொகுக்கப்பெற்ற காலத்தைக் கணித்திருக்கும் நிலையிலும், அவ்வரசர்களின் காலக்கணிப்பிற்காவது, எதாவது வரலாற்று அடிப்படைச் சான்றினைக் காட்டியுள்ளாரா என்றால், அதுவும் இல்லை.

கரிகாலன் காலத்தை மையமாகக் கொண்டு அவன் புகழ்பாடும் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலைகளுக்குக்