பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

தமிழர் வரலாறு


பெற்றது எனக்கூறும் திரு . அய்யங்கார், (பக்கம் : 156-157), உக்கிரப் பெருவழுதியின் காலத்தைக் கணிக்க முயற்சி எதுவும் எடுத்துக் கொண்டாரல்லர். சங்ககாலப் பாண்டியர் வரிசையில், கடைசி மன்னன் உக்கிரப்பெருவழுதி [The last monarch of this early pandiya dynasty was ukkirepperuvaludi” page : 460] என முடித்து காட்டும் இடத்திலாவது, அவன் ஆட்சி ஆண்டைக் கணித்துள்ளாரா என்றால் இல்லை,

இவ்வாறு காலக்கணிப்பு நிலையில், வரலாற்றுச் சான்றுகளைத் துணை கொள்ளத் தவறியது மட்டுமல்லாமல், புலவர்களை இனம் காண்பதிலும் தவறியுள்ளார். பதிற்றும் பத்தில் கிடைத்துள்ள எட்டு பத்துக்களையும் பாடிய புலவர்கள் முறையே, 1) குமட்டுர்க் கண்ணனார், 2) பாலைக் கெளதமனார், 3) காப்பியாற்றுக் காப்பியனார், 4) பரணர், 5) காக்கைபாடினியார் நச்செள்ளை யார், ) கபிலர், 7) அரிசில் கிழார் 8) பெருங்குன்றுார்க் கிழார் என்ற எண்மராவர்; இவர்களுள் காக்கைப்பாடினியார், 2) அரிசில் கிழார், 3) பெருங்குன்றூர்க் கிழார் ஆகிய மூவரும் பார்ப்பனர் அல்லர் உறுதியாக. ஆனால் பதிற்றுப் பத்து பாடிய புலவர்கள் அனைவருமே, கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் என்று கூறுகிறார் திருவாளர் அய்யங்கார் (The poets of the Ten told Ten were Brahmanas of the V or Vl century A. D. page: 495.]

எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக், கி. பி. 400க்கும் 600க்கும் இடைப்பட்ட காலத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துவதற்குத் திருவாளர் அய்யங்கார் காட்டும் தலையாய காரணம், அவை, ஆரியக் கோட்பாடுகளைப் பெருமளவில் மேற்கொண்டுள்ளன என்பதே.

திருமுருகாற்றுப்படை : தமிழ் முருகன், கார்த்திகை மகளிர் அறுவர் வளர்த்த, ஆறுமுகக் கார்த்திகேயனாக