பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

521


பற்றியன. எட்டுப் பாடல்கள் முருகனைப் பற்றியன. [Six are about Vishnu; Eight about Murugan; abundant Aryan allusions and Sanskrit words in the poems. Page : 583.]

கலித்தொகை : இப்பாக்களில், பல உவமைகள், ஆரியப் புராணக் கதைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. [In these poems, several similies are drawn from Aryan mythology. page: 570.]

அகநானூறு, புறநானூறு : வடநாட்டு ஆரியக் கருத்துக்கள், கொள்கைகள். நம்பிக்கைகள், குருட்டு நம்பிக்கைகள் பற்றிய குறிப்பீடுகள், இப்பாக்களில் பையப் பைய, நனி மிகப் பையப்பைய நுழைந்துள்ளன. (In to the poems, slowly, very slowly entered chiefly by a way of allusions northern (Aryan) ideas, concepts, beliefs and superstitions. page : 463 ]

இவ்வாறெல்லாம், கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நூலிலும் இடம் பெற்றிருக்கும் ஆரியக் கடவுள்கள், ஆரியக் கோட்பாடுகள் பற்றிய குறிப்பீடுகளை எடுத்துக் காட்டியுள்ளார். அடுக்கடுக்காக அவர் காட்டியிருக்கும் அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுவதாயின் ஏடு பெருகும்; தேவையும் இல்லை என்பதால், அது செய்திலேன்.

சிவன், முருகன், திருமால், இராமன், கிருஷ்ணன், பல தேவன், திருமகள் ஆகிய கடவுளர்கள், தமிழகத்தில் கால்கொண்ட காலம் எது? இதற்கும் அவரே விடை கண்டுள்ளார்.

அர்மீனியாவில் ஒர் இந்திய வழிபாட்டு நெறி (An Indian cult in Armenia) என தலைப்பு கொடுத்துப் பின் வருமாறு எழுதுகிறார் :

'அர்மீனியாவைச் சேர்ந்த 'அர்ஸ்சிடே' (Arsacide) மரபின் முதல் மன்னனாகிய முதலாம் 'வளர்ஷக்' (Vatershak)