பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

தமிழர் வரலாறு


(கி. மு; 149- 27) காலத்தில், இரு இந்தியத் தலைவர்கள், இயூப்ரடஸ் ஆற்றின் மேற்குக் கரையில், 'வான்’ என்ற ஏரிக்கு மேற்கில் ஒரு புதிய குடியிருப்பை நிறுவி. கிருஷ்ணன், பலதேவன் (அர்மீனிய மொழியில் கிஸ்னி (Gisani), ‘தெமெதெர்’ (Demeter) வழிபாட்டிற்காகக் கோயில்களைக் கட்டினர். இது வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய வழிபாட்டு நெறியின் பெருக்கமா? மிக உறுதியாக இல்லை. கிருஷ்ண, பல தேவர்கள், திருமாவலின் அவதாரங்களாம் எனப் புராணங்கள் கூறினாலும், இவ்விரு கடவுள்களையும், ஒருசேர வழிபடும் த னி வழிபாட்டு நெறி, வட இந்தியாவில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனால் , பழந்தமிழ் இலக்கியங்கள். இதற்கான எண்ணற்ற அகச்சான்றுகளை அளிக்கின்றன. இவர்களில், முன்னவன் மாயோன் என்ற பெயரில், முல்லைநிலக்கடவுளாவன். கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக் கொடியாகவும் கொண்ட வெண்ணிறக் கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப் படும் பின்னவன், தொடக்கத்தில் உழவுத் தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன் பனை, கங்கை வெளியில் வளர்வதில்லை; ஆகவே, பலதேவ வழிபாடு, கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலையில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத் தாக்குப் பகுதியிலேயே, அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.

பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வட நாட்டில் இருப்பதாக நாம் கேள்விப் பட்டது இல்லை: ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும், அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்துக் கட்டப்பட்டுள்ளன், எனக் கூறிவிட்டு, தம் கூற்றை உறுதி செய்யச் சிலப்பதிகாரத்திலிருந்து சில வரிகளைக் காட்டி விட்டு, தொடர்ந்து, ‘இவ்வெடுத்துக்காட்டுக்கள் எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்து என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில் பலதேவனுக்குக் கோயில்