பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

523


[Tales of Vishnu and Siva, were evolved in the Agama schools, which rose to prominence in the period, succeeding the Bharatha battle, page : 87.]


‘பெரும்பாலும், கி. மு. 1000க்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்திலேயே ஆகம நெறிக் கோட்பாடுகள், மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டுவிட்டன [These Agama teachings were incorporated in an unsystematic form, into the Mahabaratha probably some centuries after 1000 B. C. page: 87.]


பாரதப்போர் குறித்த கதையில் வடஇந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதற்கான அகச்சான்று இருக்கிறது: திரெளபதியின் சுயம்வரத்திற்கு வந்திருந்தவர்களில் பாண்டியனும் ஒருவன் என்கிறது, [in the story of the war, which is the heart of the Mahabaratha, there is evidence that there were political relations between South India and North India. Thus a Pandya king was one of those who were present at the Swayamvara of Droupadi. page: 88-89.]


இவ்வாறெல்லாம் கூறியிருப்பதன் மூலம் பாரதத்தின் தலையாய கதாபாத்திரமாகிய கிருஷ்ணனைத், தமிழ்நாடு, கி. மு. ஆயிரம் ஆண்டளவிலேயே அறிந்திருந்து என்பதைத், திரு. அய்யங்கார் ஒ ப் பு க் கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது, இ வ் வா று, ஆகம வ ழிபாட்டு நெறிக் கிருஷ்ணனைக் கி. மு. ஆயிரத்திலேயே அறிந்திருந்தனர் என உறுதி செய்துவிட்டு, அவ்வாகமநெறிக் கடவுளர்கள் இடம் பெற்றிருக்கும் தமிழ்ப்பாக்களின் காலத்தை, ‘ஆரியத்திற்கு முந்திய இந்திய வழிபாட்டு நெறியிலிருந்து முகிழ்த்த ஆகம வழிபாட்டு நெறி, தென் இந்தியர் உள்ளங்களை அடிமை கொள்ள, கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் பயணம் மேற்கொண்டது"