பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

527



(371-373) என்ற வரிகளை எடுத்துக்காட்டிவிட்டு, தமிழிலக்கியத்தில், திருமாலின் இக்காட்சி இடம் பெற்றிருப்பது இதுவே தொன்மையானதாம்'’ எனக் கருத்தும் அறிவித்து விட்டு, ‘'விஷ்ணுவின் இத் திருக்கோலம், எப்போது உருவகப் படுத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இப்போது நாம் பெற்றிருக்கும் அனந்தசாயி சிற்பக் கலை, குப்தர் காலத்துக்கு முந்தியது ஆகாது’ என முடித்துள்ளார். (This is the earliest reference in Tamil literature to the worship of Vishnu stretched on his serpent couch. When this image of Vishnu was first conceived, we do not know. But the Ananthasayi Sculptures We now have in India, do not go beyond the age of the Guptas. page : 392)


குப்தர் காலம் எது? அதன் தொடக்கம் கி. மு. 325 என்பது, இந்திய வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவராலும் ஒருசேர ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று: ‘'கி. மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி நாற்கூற்றில், உலகம் அறிந்த நனிமிகப் புகழ் வாய்ந்தவன் சந்திரகுப்தன் (The most splendid that the world knew in the last quarter of the IV century B. C. is Chandragupta. page : 142) எனக் கூறி திரு.அய்யங்கார் அவர்களும், இக்காலக்கணிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.


அனந்த சாயித் திருமேனி காஞ்சியில் கோயில் கொண்டு விட்டதைக் குறிப்பிடுகிறது பெரும்பாணாற்றுப்படை: உண்மை: ஆனால் அந்த அனந்தசாயித் திருமேனி வைஷ்ணவ சமயத்தவர் உள்ளத்தில், கி. மு. நான்காம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்ட ஒன்று: ஆகவே, அது குறிப்பிடப்பட்டிருப்பது கொண்டு, அப்பெரும்பாணாற்றுப்படைப் பாடலைக், கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு அதாவது ஒன்பது நூறாண்டுகளுக்குப் பின்னுக்குக் கொண்டு விடுவது வரலாற்றுத் திறனாய்வு முறையாகாது.

ஆகவே, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிவனையோ, திருமாலையோ, அவர்களைத் தொடர்பு படுத்திக் கூறியிருக்கும் புராணக் கதைகளையோ, துணை