பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

தமிழர் வரலாறு


கொண்டு, அப்பாக்களின் காலத்தை முடிவு செய்வது அறவே பொருந்தாது.


பத்துப்பாட்டு எட்டுத் தொகை ஆகிய சங்க இலக்கியங்களைக், கி. பி. 400க்கும் 600க்கும் கொண்டுவந்து நிறுத்தியதற்குத் திருவாளர் அய்யங்கார் அவர்கள் காட்டிய காரணம், அவை ஆரியக் கடவுளர்களைக் குறிப்பிடுகின்றன என்பது மட்டுமன்று: வேறுபல காரணங்களையும் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று சாதி வேறுபாடு.


ஆரிய நால்வருண அமைப்பு வேதகாலத்தில் ஆகிய வர்த்தத்தில் மட்டுமே வழக்காற்றில் இருந்தது. தென்னாட்டில், நால்வருணக் கோட்பாடு, வெறும் கொள்கை அளவில் இருந்ததேயல்லது, என்றும் நடைமுறையில் இல்லை. காரணம், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை பிராமணர்கள் வாழ்க்கை, தமிழர் வாழ்க்கை நெறிக்கு அப்பாற்பட்டே இருந்த்து. Caturvarnya, the four-caste organization of the Aryas was a fact only in Aryavartta in the vedic Age...In South India caturvatnya was always a matter of theory, and was never a reality. For the life of the Brahmanas till about the V century A. D., was totally apart from that of the bulk of the tarril people”...page : 122.) என அறிவித்துவிட்டார்..


அவ்வாறு அறிவித்தவர், ‘'உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே எனத்தொடங்கி, கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே என முடியும் புறநானூற்றுப் பாடலை (183) எடுத்தாண்டு, இதிலிருந்து, தன்னிலும் கீழான சாதியான் ஒருவனிடம், பிராமண சாதியான் ஒருவன் கற்பதை யூகிக்க முடிகிறது. [The guess can be made, that by men of the Brahmana caste, learning from those of lower ones.” Page : 511) எனக் கருத்தறிவித்துச் சாதியைக் குறிப்பிடுவதன் மூலம்,