பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

535

என்பதே உண்மை நிலை ! ஆகவே, அவை கூறும் சங்க இலக்கியங்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியனவாகக் கோடலே முறை,

தமிழர் வரலாறு 23 ஆம் அதிகாரத்தில், “மதுரையில் ஆகம வழிபாட்டு தெறி” [The Agama culis in Madura] என்ற தலைப்பின் கீழ், ஆகம வழிபாட்டு நெறிகள் விரைந்து பரவியமைக்கான சான்றுகளை மதுரைக் காஞ்சியில் பெறலாம். [In Madurakkanchi we get evidence of the rapid spread of the Agama cults in the town of Madura. Page : 450] எனக் கருத்தறிவித்துவிட்டு, “நீரும், நிலனும், தீயும், வளியும், மாக விசும் பொடு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன்” (463 - 455} என்ற வரிகளைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

அது போலவே, “சேர அரசர்கள்” என்ற தலைப்புள்ள 25 ஆம் அதிகாரத்தில், “பதிற்றுப்பத்து” என்ற குறுந்தலைப்பின் கீழ், பதிற்றுப்பத்துப் பாக்கள், ஆரியக் கோட்பாடுகள், ஆகமப் பழக்க வழக்கங்களால் நிறைந்து வழிகின்றன. ஆகவே, அவை, ஆகம நெறிக் கோயில் வழிபாடு தமிழகத்தில் பரவிய பின்னர்ப் பாடப்பட்டனவாதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுவிட்டு, தம் கூற்றுக்குச் சான்றாக, “நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின் அளப்பு அரிவை” (பதிற்றுப்பத்து : 14: 1-2) என்ற வரிகளை எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வாறு காட்டிய தன் மூலம், பஞ்ச பூதங்களைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள், கி. பி. ஐந்து, அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கூறாமல் கூறியுள்ளார், திருவாளர் அய்யங்கார்,

ஆனால், தொல்காப்பியர், “நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (தொல். பொருள் : 63 ) என விளக்கம் அளிப்பதன் மூலம், ஐம்பத அறிவு, தமிழர்களிடையே, தாம் இலக்கணம் எழுதுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இருந்ததை உறுதி செய்து, அவ்-