பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

தமிழர் வரலாறு


வைம்பூத அறிவு இடம் பெற்றிருக்கும் பாக்கள், தம் காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பாடப்பெற்றனவாம் என்பதை உறுதி செய்துள்ளார்.

கரிகாலன் வரலாறு பற்றித் திறனாய்வு செய்யும் 20 ஆம் அதிகாரத்தில், ‘'ஆரிய நாகரீகம், தமிழ் நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும், காவிரிப் பூம்பட்டினத்தில், நனி மிக முற்பட்ட காலத்திலேயே பரவி, வேறெங்கும் பெறாத, பெரும் செல்வாக்கினை, அங்கும் பெற்றுவிட்டது’ (Aryan culture spread in Kavirippumpattinam, sooner than in the rest of the Tamil country and attained there an influence which it did not possess in other places. Page : 353] எனக் கூறி, அதற்குச் சான்றாக, “நான்மறையோர் புகழ் பரப்பியும்’' (202) என்ற பட்டினப்பாலை வரியினைக் காட்டியுள்ளார்.

இளந்திரையன் வரலாறு பற்றித் திறனாய்வு செய்யும் 21ஆம் அதிகாரத்தில், ‘'நான் அறிந்த வரையில் தமிழ்நாட்டில் பிராமணர் குடியிருப்பு பற்றிய முதல் வருணனை இதுதான் [This is, so far as I know, the earliest description of Brahmana village in the Tamil land.” ]என்க் கூறிச் சான்றாக,

செழுங்கன்று யாத்த சிறு தாள் பந்தர்,
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்,
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

மறைகாப்பாளர் உறைபதி’

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகளை (297-392) எடுத்தாண்டுள்ளார்.

பதிற்றுப்பத்து பற்றிய திறனாய்வு செய்யும் 25ஆம் அதிகாரத்தில், ‘பதிற்றுப் பத்துப் பாடலாசிரியர்கள், கி.பி.