பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

53


‘ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுப் பார்ப்பனர்கள் : ஆகவே அவை, ஆரியக் கோட்பாடுகள், ஆகமநெறிப் பழக்கவழக்கங்களால் நிரம்பி வழிகிறது [The poets of the Ten fold-Ten, were Brahmanas of the V or VI Century A. D. Hence the poems team with references to Aryan ideas and Agama practices. Page : (49 5-4 96)] என கூறி விட்டு அது தொழில் புரியும் அந்தணர் பற்றிய குறிப்பு வரும், ‘'ஓதல் வேட்டல், அவை பிறர் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து, ஒழுகும் அந்தணர்’' என்ற பதிற்றுப்பத்தி வரிகளை (24 : 6 - 8) எடுத்தாண்டுள்ளார்.

முல்லைப்பாட்டுப் பற்றித் திறனாய்வு செய்யும் 21ஆம் அதிகாரத்தில், “இப் பாட்டிலும், ஆரியக் கோட்பாடுகள் பற்றிய குறிப்பீடுகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக என இல்லாமல் நிறையவே உள்ளன (In this poem also, the Aryan allusions are not casual but intimate. Page : 5428] எனக் கூறிவிட்டு, அதற்குக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகக் ‘கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கேல்’ என்ற வரிகளை (37-38) காட்டியுள்ளார்.

இவை போலும், அகச்சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டியதன் மூலம், அவை இடம் பெற்றுள்ள உங்க இலக்கியப் பாடல்கள், கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை நிலை நாட்ட முனைந்து உள்ளார். திரு. P. T. S. அவர்கள்

ஆனால், இவ்வாரியக் கோட்பாடுகள், தம் காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழரிடையே இடங் கொண்டுவிட்டமையால், அவற்றிற்கு இலக்கணம் வருத்திருப்பதன் மூலம், அவ்வாரியக் கோட்பாடுகள் இடம்பெற்றிருக்கும் சங்க இலக்கியப் பாடல்கள், தம்முடைய காலத்திற்குப் பல நூறு ஆண்டுகாலம் முற்பட்டன என்பதை உறுதி செய்துள்ளார் தொல்காப்பியர். அவர் கூறும் இலக்கணங்கள் இதோ: