பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

தமிழர் வரலாறு

“அறுவகைப் பட்ட பார்ப்பன பக்கம்” -தொல் : பொருள் 74.


[அவையாவன. ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன]

“ஓதலும் துாதும் உயர்ந்தோர் மேன” -தொ. பொ. 28.


“நூலே கரகம், முக்கோல், மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய” -தொ. பொ. 615.


“கரிகாலன், தன்னுடைய புதிய தலை நகரில், ஆரிய நாகரீகத்தோடு கொண்டுவிட்ட நெருக்கமானத் தொடர்பின் விளைவு, அவன் கற்பனை வளமெல்லாம், பிராமணர்களால் செய்து காட்டப்பட்ட ஒளிமயமான எரியோம்பல் நெரிகளால் கவரப்பட்டு, அவன், பொருட்செலவு மிக்க வேத யக்ஞங்களைப் பேணிக்காத்த, முதல் தமிழரசன் ஆயினான்” [One result of Karikal’s coming into intimate contact with Aryan culture in his new capital was, that his imgination was captivated by the gorgeous fire-rites performed by the Brahmanas and he, thus became, the first Tamil king, that patronised the costly vedic yajnas.” (Page: 356-357) எனக் கூறிவிட்டு, அவன் புகழ்பாடும், “அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை” என்ற பட்டினப்பாலை வரிகளையும் (54-55), “பருதிஉருவின் பல்படைப் புரிசை, எருவை நுகர்ச்சி யூபநெடுந்துாண், வேதவேள்வித் தொழில் முடித்தது உம்” என்ற புறநானூற்று வரிகளையும் (புறம்: 224 -9) காட்டியுள்ளார்.

20 ஆம் அதிகாரத்தில் இவ்வாறு கருத்து அறிவித்ததைத் தொடர்ந்து, 28 ஆம் அதிகாரம் வரையுள்ள அதிகாரங்கள் ஒவ்வொன்றிலும் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் போலும் பெருவேந்தர்கள், இளந்திரையன், மலையமான் திருமுடிக்காரி போலும்