பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

படையோடு இலங்கை மீது படையெடுத்து, அத்தீவின் வடமேற்குப் பகுதியைப் பாழ்செய்து, அநுராதபுரம், கண்ணுக்குப் புலனாகும் வரை ஊடுருவிச் சென்று, மிகப்பெரிய, கொள்ளைப் பொருள்களோடும், 12000க்குக் குறையாத சிங்களச் சிறைக்கைதிகளோடும் திரும்பினான் ; வங்க, நஸிகனின் மகன் கஜபாகு, தன் தந்தையின் அரியணையில் அமர்ந்ததும், சிங்கள மக்களுக்கு இழைக்கப்பட்ட இழிவிற்குப் பழிவாங்கிவிட்டான். நேல - யொத்ஹயன் (Nela yodhaya) என்பான் படைத்தலைமையின் கீழ், பெரிய படையோடு, ஆதம் பாலத்தின்மீது அணிவகுத்துச் சென்று, நாட்டைச் சூறையாடி, தஞ்சாவூர் அரசன், 12000 சிங்களவர்களைத் தரவும், அத்துடன் அதற்கு இருமடங்கு எண்ணிக்கையான தமிழர்களைச் சிறைக் கைதிகளாக, இலங்கைக்குக் கொண்டு செல்லத் தரவும், மறுத்தால் தஞ்சை மாநகரைத் தரைமட்ட மாக்கித் தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தினான். அவ்வேண்டு கோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கஜபாகுடு, போர்க் கைதி ளோடும், பண்டு கொண்டு செல்லப்பட்ட சிங்களவர்களோடும் மட்டுமல்லாமல், பத்தினிக் கடவுளின் காற்சிலம்பு, கஜபாகுவின் படை கொள்ளையடித்த, நான்கு தெய்வத் திருமேனிகளின் கைகளோடு கஜபாகு இலங்கை திரும்பினான்”. (Sketches of Ceylon’s History Page : 26) மகா வம்ஸம், குறிப்பிடவே இல்லை என்ற உண்மையாலும், இது, பிற்காலத்திய, நம்புதற்கு இல்லாத கட்டுக்கதை என்பது உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூர், சோழ அரசின் தலை நகராக, கி. பி. 850இல் ஆயிற்று. இக்கட்டுக் கதை, அத் தேதிக்குப் பிறகே கட்டிவிடப்பட்டிருக்க வேண்டும்;

மற்றொரு கருத்தும், ஈண்டுக் குறிப்பிடல் தகும். பெயர், குறிப்பிடப்படாத ஒரு சோழ அரசன், சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்படாத காலத்தில் வாழ்ந்திருந்தவராகிய உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், உண்மைச் சான்றின் நிழல் ஒரு சிறிதும். இல்லாமல், இச்சோழனைக், கரிகாலனாகக் கொண்டுள்ளார், சிலப்பதிகார நிகழ்ச்சிகள், நடைபெற்றபோது, காவிரிப்பூம்,