பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4Ꮾ . தமிழர் வரலாறு

பட்டினத்தில், ஆண்டுகொண்டிந்த சோழனைப் பற்றிய பேசும்போது, சிலப்பதிகாரம் பாடிய புலவன், இக்கரி காலனைத்தான் மனதில் கொண்டிருந்தார் என நம்மை நம்பத் துாண்ட, அப்பாட்டின் மூலத்தில் எதுவும் இல்லை. அதற்கு மாறாகக், கரிகாலன், தெளிவாகப் பெயர் சுட்டிக் குறிப்பிடப்பட்டிருக்கும் இரு இடங்களிலும், அவன் பெருஞ் செயல்கள், இறந்த காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. அவன், இமயத்திற்குப் படையெடுத்துச் சென்று மீண்டதாகிய கட்டிவிடப்பட்ட பெருஞ்செயலைக் குறிப்பிடும் ஒரு பகுதி ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டது. மத்றொன்று, வானளாவும் பெரும் புகழ் கொண்ட கரிகால் வளவன், புதுப் புனலில் புகுந்தாடும் விழாவின் முதல் நாளன்று, புதுப்புது ஆடைகளால் தன்னை அணி செய்து கொள்வது போல, நகர மக்கள் வேறுவேறு ஆடைகளை அணிந்து கொண்டனர் எனப். புனலாட்டு விழா பற்றிய விளக்கங்களைக் கூறும் பகுதியில் இடம் பெற்றுளது. -

"விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், தண்பதம் கொள்ளும் தலைநாள் போல" .

-சிலம்பு : காதை : 6, பக்கம் : 159 - 160

இக்காப்பியம் - இயற்றப்படுவதற்குச் சிலகாலம் முற்பட்ட காலத்தில், புதுப்புனலில் புகுந்தாடும் விழாவிைைக், கரிகாலன் தொடங்கி வைத்தான் என்பதே இதன் பொருள்.

இப்பொருள் பற்றி ஆராய்ந்த இன்றைய எழுத்தாளர்கள், மூலத்தையும், உரையையும் ஒன்றாகக் கொண்டு குழம்பி. நூல் ஆசிரியரின் கூற்றும், நூலாசிரியர்க்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டவராகிய உரையாசிரியரின் கூற்றும் வரலாற்றுச் சான்றாம் தன்மையில் ஒத்த மதிப்புடைய எனக் கருதியுள்ளனர். இம்மூன்று அரச இனங்களின் பழைய வரலாறு குறித்து. அண்மையில் எழுதப்பட்டனவற்றில், பெரும் பகுதி, அல்விலக்கியம் எழுந்த காலத்துச் சமகாலச்சான்றுகள், உரையாசிரியர்கள். இன்றைய எழுத்தாளர்கள், வரலாற்றுச்