பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

~48. தமிழர் வரலாறு

அப்பட்டியலின் முதலாம் கஜபாகுவையும் ஒருவராகக் கொண்டுள்ளார் (Essay of Tamil literature 1884 Page: 30)

   திரு. குமாரசாமி அவர்கள் இருக்கருத்தை ஏற்றுக் கொண்டு, பழந்தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய தம்முடைய கருத்துக்கினிய கட்டுரையில், மதிப்பிற்குரிய குமாரசாமி அவர்கள், கரிகாலனைக், கி. பி. முதல் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கிறார். ('பழந்தமிழ்ப் புலவர் இருவரோடு 

அரைமணிநேரம் [A half-hour with two Ancient Tamil poets J. R. A. S., Ceyion Branth 1894. Hultson in S, 1. I, II, II Page : 372] இக்கருத்து, சிலப்பதிகார’ உரைகள், கரிகாலனை, இலங்கை கஜபாகுவின் சம காலத்தவனாக சேர அரசன் செங்குட்டுவனின், தாய்வழிப் பாட்டனாகக் கூறுவதை அடிப்படையாகக் கொண்டுளது. திருவாளர் குமாரசாமி, இந்தக் சுயவாகுவை. மகாவம்சம் என்ற இலங்கை வரலாற்று நூலின்படி, கி. பி. 113 முதல் 135 வரை அரசாண்ட முதலாம் கஜபாகுவாகக் கொண்டுள்ளார். (S: I:II:I'II. Page : 373) இக்கருத்தின் மீது, சிலப்பதிகார உரைகள், கரிகாலனைச் செங்குட்டுவனின் தாய்வழிப்பாட்டனாகக் குறிப்பிடவில்லை என்பது நினைவில் கொள்ளப்படல் வேண்டும். நூலாசிரியரால் தான் பாடப்பட வேண்டும் என்ற இன்றியமையாமையில்லாத, நூலில் கூறப் படும் கதையின் சுருக்கத்தைக் கூறும், நூலின் முன்னுரையாம் பதிகத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரைக்கான முன்னுரையில், செங்குட்டுவன் பேரொளி வாய்ந்த ஞாயிற்றி னுடைய ஏழ்குதிரைகள் பூட்டப்பட்ட பெரிய தேருடைய சோழன் மகள் நற்கோணையின் மகன் எனக் கூறப்பட்டுளது: இது, செங்குட்டுவன், கரிகாலன் பெயரன் எனும் பொருளை நிச்சயமாகத் தருவதாகாது. இருபத்தொன்பதாவது காதையின் தொடக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் உரை நடைப்பகுதியில், திகழ் ஒளி ஞாயிற்றின் சோழன், அதாவது சூரிய குலத்துச் சோழன் மகளுக்குப் பிறந்த மகன் என்ற தொடர் மட்டுமே இடம் பெற்றுளது. அதற்குமேல் எதுவும் இல்லை (மொழி பெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு: நூலாசிரியர்