பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 . தமிழர் வரலாறு

" அரியணையில் அமரும் ஊழ், மூத்தோனாம் செங்குட்டுவன்வனுக்கு இல்லை. உனக்கே உண்டு" என, வருவது உரைக்கும் நிமித்திகன் கூற, அவனைச் சினந்து நோக்கிச், கொங்கவிழும் கடிமணமலர்களால் ஆன மாலை அணிந்த, வெற்றிக் கொடியசையும் தேர் முதலாம் நாற்படைகளைக் கொண்ட மூத்தோன் செங்குட்டுவன், நிமித்திகள் உரை கேட்டு உற்ற பெருந்துயர் இல்லாமல் போக, பகலோன் எழும் பக்கமாம் கிழக்கு வாயிற்கண் இருக்கும், துறவிகளுள் ஒருவனாகிப், பரந்து அகன்ற பேரிடமாம் உலகைத்தாங்கும் துயர்ப்பாரம் நீங்க, அது கைவிடுத்து, சிந்தையால் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத, வான்போல் உயர்ந்த, அழிவிலாப் பேரின்யத்தை ஆட்சி கொண்ட பேரரசே’.

துந்தை தாள் நிழல் இருந்தோய் ! நின்னை, அரசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்று, உரை செய் தவன்மேல், உருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்,

செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப் 

பகல்செல் வாயில் படியோர் தம்முன் அகவிடப் பாரம் அகல நீக்கிச்,

சிந்தை செல்லாச் சேணெடும், தூரத்து 

அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து’

   - சிலப்பதிகாரம் : 30 : 174 - 182

தமிழிலக்கிய உலகம், பெருமித உணர்வோடு மேற்கொண் டிருக்கும், கரிகாலன் நனிமிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவன் என்ற கொள்கைக்கு அடிப்படை நிலைக்களமாம் நற்சோணை என்ற பெயரையும், கரிகாலனுக்கும், அவருக்கும் உள்ள உறவினையும், இப்பாடற்பகுதியிலிருந்து, திரு.கனகசபை அவர்கள், எப்படி கண்டெடுத்தார் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும், இயலவில்லை.