பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழர் வரலாறு

திறனாய்வுக்கு உள்ளாக்கப்படும்வரையும் இக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வரமாட்டேன்" எனக் கூறியுள்ளார்: (S.I.l Ill : III, Page:378)ஹல்ட்ஸ் அவர்களின் திறனாய்வு முடிவினைச் சந்திக்க, திரு. கனகசபை அவர்கள் முயலவில்லை. திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், திரு. சேஷகிரி சாஸ்திரியார், திரு. குமாரசாமி ஆகியோர் சித்தாந்தங்களை ஒப்புக்கொண்டு, திரு. ஹல்ட்ஸ் அவர்களால், வேண்டப்பட்ட அகச்சான்றுகள் மூலம், இரு கஜபாகுகளையும் அடையாளம் காட்ட முயன்றுள்ளார். "சிலப் பதிகாரக் காப்பியத்து முதல் காண்டத்தின் கருத்தோடு, மேற்கொள்ளப்படும் திறனாய்வு, பாட்டுடைத்தலைவன் வாழ்க்கையின் தொடக்க காலத்தில், புகார் அதாவது, காவிரிப்பூம்பட்டினத்து அரசன். கரிகாற்சோழன் என்பதை உணர்த்தும், ஆளும் அரசன் பற்றிய குறிப்பீடுகள் அனைத்தையும், உரையாசிரியர், கரிகாலனுக்கே பொருந்துமாறு ஒரே நிலையினதாகப் பொருள் கண்டுள்ளார் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, (எடுத்துக்கொண்ட பணிக்கு. முழுவதும் தகுதி வாய்ந்தவர் உரையாசிரியர். அகவே, தம்முடைய உரையில், உண்மையான காதுவழிச் செய்தியைத் தவிர்த்து, வேறு எதையும், ஆண்டிருக்க மாட்டார் என. எதிர்பாக்கலாம் ஆதலால், இது ஒன்றே போதுமானதாகும்). பெயர் மூலமாகவும், இமயத்தின் மீது புலிச் சின்னத்தை நாட்டியது அவனுக்கே உரித்தாகும் உண்மை மூலமாகவும், அவனைக் குறிக்கும் எண்ணற்ற, நேரிடைக் குறிப்பீடுகளும் உள்ளன" எனக் கூறுகிறாா் (Anciant India. Page : 350) உரையாசிரியர் ஆயிரம் ஆண்டுகள் கழித்து உரை செய்துள்ளார் என ஏற்கெனவே கூறியுள்ளேன். ஒரு கதை, ஒருதலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கைம்மாறி வருவதே காதுவழிச் செய்தி என்பதன் பொருள். உரையாசிரியரின் விளக்கங்கள். அவருடைய கண்டுபிடிப்புக்கள் ஆகா: மாறாகப், பழைய உரையாசிரியர் தலை முறைகளிலிருந்து, இடையறவு படாமல், வரிசையாகக் கைம்மாறிக் கைம்மாறி வந்தனவே என்பதை உணர்த்தும் சான்று எதுவும்.