பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழர் வரலாறு

 ஒர் அரசனின், உண்மையான, அல்லது கற்பனையான அருஞ்செயல், அவன் வழிவந்தவர் அனைவர்க்கும் உரியதாக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று; அவ்வகையில், ஓர் அரசன் அசுவமேத யாகம் செய்திருந்தால், அது, அவன் வழி வந்தவர்களுக்கும் ஏற்றி உரைக்கப்படும். ஒருவன் சோமயாகம் செய்திருந்தால், அவன் வழிவந்தவர் அனைவரும், அவர்கள் வ்ராத்யர் வாழ்வு மேற்கொண்டிருந்தாலும், எக்காலத்தும் சோமயாஜிகள்தாம். அதாவது, கரிகாலன் இமயம் வரை பரப்பிய ஆட்சியை, ஆண்டு கொண்டிருக்கும் சோழன், இமயத்திற்கு அப்பாலும் பரப்புவானாகுக என்பதாம். இப்பகுதி ஏதேனும் உதவியிருக்கு மாயின், அது, கரிகாலனைச், சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்னர் அரசாண்ட அரசனாக ஆக்கியதே ஆகும். 2) "பதிப்பாசிரியர் பார்வையிட்ட ஒரு கையெழுத்துப் படிவத்தில், கரிகாலன் பெயர். பட்டினப்பாலை ஆசிரியர்க்கு, அவன் பரிசளித்தது ஆகியவற்றின் நேரிடைக் குறிப்பீடு உளது."ஏனைய உரையாசிரியராலும், பதிப்பாசிரியராலும், உண்மையானவை என ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், சிலப்பதிகார மூலம், உரை ஆகியவற்றின் கையெழுத்துப் படிகள் சிலவற்றில், அவன் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது, அந்த அரசன், அப்பாட்டில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பதை எவ்வகையிலும் உறுதி செய்துவிடாது. 3) "மேலும், ஆறாம் காதையின் 158-60 வரிகள், ஒருவர் எத்துணைத் தெளிவாக விரும்புவாரோ, அத்துணைத் தெளிவாக, கரிகாலன் அந்த நாட்களில் ஆண்டு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளன". "விண்பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன், தண்பதம் கொள்ளும் தலை நாட்போல" -- இவ்வரிகள், அதற்கு மாறான ஒன்றையே குறிப்பிடுகின்றன. இவை ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அப்பாட்டில் விழாவின் சில நிகழ்ச்சிகள், முந்தைய காலத்தில், புனல் விளையாட்டின்போது, கரிகாலன் மேற்கொண்ட விழா நிகழ்ச்சிகளை ஒத்துள்ளன என்பதே, அவற்றிலிருந்து பெறக் கூடியதாம். 4) "உரையாசிரியர்,