பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காிகாலன்

57


கன்னவில் தோளாயோ என்னக் கடல் வந்து
முன்நிறுத்திக் காட்ட அவனைத் தழி இக் கொண்டு
பொன்னங் கொடி போலப் போதந்தாள்’’.

கரிகாலனின் இச் சேரமாப்பிள்ளையின் பெயர் ஆட்டன் அத்தி என்பது ஆதலாலும், செங்குட்டுவனுக்கு அடுத்த முன்னோர், முறையே அவன் தந்தை சேரலாதனும், அவன் பாட்டன் உதயஞ்சேரலும் ஆவர் ஆதலாலும், ஆட்டன் அத்தி, ஆண்டிருந்தான், செங்குட்டுவனுக்கு நெடுங்காலத்துக்கு முன்னர் ஆண்டிருக்க வேண்டும். கூறிய அப்பகுதியில், தான் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்தில், தனக்கு முன் பிறந்து. கணவர் காட்டும் நெறிபிறழாக் கற்பு நெறியால் புகழ் பெற்ற பத்தினிப் பெண்டிர் எழுவரை வரிசைப்படுத்திக் கூறி, கரிகாலன் மகளும், ஆட்டனத்தியின் மனைவியுமான ஆதிமந்தியை. அவர்களுள் இரண்டாவதாகக் கூறியுள்ளாள், கண்ணகி. ஆகவே, இப்பகுதியில், உண்மையில் கரிகாலன், இறந்த காலத்தவனாகவே காட்டப்பட்டுள்ளான். ஆக, கூறிய இவற்றால், கரிகாலனைப் பெயர் சுட்டியோ, மறைமுக வகையிலோ குறிப்பிடும் சிலப்பதிகாரப் பகுதிகள் அனைத்தும் அவன் காலம் (எத்தனை ஆண்டு என்பதை நம்மால் சொல்ல இயலாது), அக்கதை நிகழ்ச்சிகள் தொடங்கிய காலத்திற்கு முற்பட்டது. ஆகவே, கரிகாலன் காலத்தைச், செங்குட்டுவன் காலத்தைக் கொண்டு கணிப்பது இயலாது என்பதையே உறுதி செய்கின்றன.

செங்குட்டுவன் காலமும், சம காலத்தவன் கஜபாகு என்பதிலிருந்து உறுதி செய்வது இயலாது. திருவாளர் ஹல்ட்ஸ் அவர்களின், “அகச் சான்றுகளால் துணை செய்யப்படும்வரை, பெயர் ஒற்றுமை பொருளற்றது" என்ற தடைக்கு இன்னமும் விடையளிக்கப்படவில்லை. மேலும், காலத்தால் அவனுக்கு நெருங்கியதான மகாவம்சத்தில் கஜபாகு, உணர்ச்சிமிக்க பெளத்தனாகவே படைத்துக் காட்டப்பட்டுள்ளான். புத்த மடங்களைக் கட்டும் அவன் செயல்கள் விளக்கிக் கூறப்பெறும் அந்நூலில், இந்தியாவி