பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தமிழா் வரலாறு

 லிருந்து, பத்தினி வழிபாடு, வந்து இடம் பெற்றதற்கான குறிப்பு எதுவுமே இல்லை என்பது மட்டுமன்று, கஜபாகு வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பெரும்போக்கு, வேறு சமயம் எதையும் பொருட்படுத்தா அளவு, அவன் ஒரு வெறிபிடித்த பெளத்தன் என்ற முடிவிற்கே எவரையும் கொண்டு செல்லும்: பத்தினித் தேவியின் காலணிகலன்களைக், கஜபாகு தஞ்சாவூரிலிருந்து எடுத்துச் சென்றான் என்பது கூறப்பட்டு, அதனால், பத்தினி, ஒரு பெண் தெய்வமாக, அவன் காலத்திற்கு முன்பே வழிபடப்பட்டாள் என்பது குறிப்பாக உணர்த்தப்படுவதால், கஜபாகுவின், சாேழநாட்டு வெற்றியைக் குறிப்பிடும் இலங்கையின் பிற்காலக் கட்டுக்கதைகள், பத்தினிவழிபாடு, அவன் காலத்திற்கு முற்பட்டது எனக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரத்தில், மாளுவ நாட்டு மன்னன் போலும் மற்றவர்களுள், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், கண்கள் கண்டுகொண்டிருக்க வானுலகம் புக்குத் தெய்வமாகிவிட்ட கண்ணகிக்குச், செங்குட்டுவன் எடுத்த விழாவிற்கு வந்தான் எனக் கூறப்பட்டுளது.

அடிக்குறிப்பு :

"மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளணி வேள்வியில்"

-சிலம்பு : காதை : 30 வரி : 159-162

அக்காப்பியத்தின் உரைப்பாயிரமாம், உரைபெறுகட்டுரை, மேற்படி கூற்றொடு ஒருபகுதி மாறுபட்டு, கண்ணகியின் வியத்தகு கதையைக் கயவாகு கேட்டு, பற்பல முறை விழா எடுத்தான் எனக் கூறுகிறது.

அடிக்குறிப்பு :

("அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம்