பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காிகாலன்

59


முந்துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப") இவ்வுரைப்பாயிரம், பெருங்கிள்ளி என்ற சோழன், பத்தினித் தெய்வத்திற்கு, உரையூரில் கோயில் கட்டினான் என்றும் கூறுகிறது. "அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து, எத்திறத்தானும் வரந்தரும் இவளோர் பத்தினிக் கடவுள் ஆகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தல் விழா நிகழ்வித்தோனே"-----ஆனால், சிலப்பதிகாரக் காப்பிய முதல் நூலில், இது குறிப்பிடப்படவில்லை: ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இலங்கை வரலாற்றுக் காலவரிசைப் பட்டியல், கஜபாகுவுக்கு முன்பே, பத்தினித் தேவிக்குத் தஞ்சாவூரில் கோயில் இருந்ததைக் குறிப்பாக உணர்த்துகிறது. பத்தினித் தெய்வ வழிபாட்டின் தோற்றம் குறித்த பழங்கதைகள் நுண்ணிய திறனாய்வுக்குத் தாங்கமாட்டா அளவு, ஒன்றோடொன்று பெரிதும் முரண்படுகின்றன.

செங்குட்டுவனும், கஜபாகுவும் சமகாலத்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்திலிருந்து முடிவு செய்வதற்கு மற்றொரு தடையும் உளது. கஜபாகு சம காலத்தவன் என்ற வாதத்தின் அனைத்து முடிவிற்கும் அடிப்படையாய் அமைந்து, சிலப்பதிகாரத் தொடரில் இடம் பெற்றிருக்கும் கயவாகு. என்ற சொல்லுக்கு, வேறு ஒரு பாடபேதமும் உளது. அது. “கயவாகு" என்பதற்குப் பதிலாகக், “காவல்" என்பதாம். இரண்டனுள் எது சரியான பாடம் என்பதைக் கண்டறிய வழியில்லை. "காவல்" என்பதே சரியான பாடமாய்விடின், கஜபாகு சமகாலத்தவன் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட மாளிகை அனைத்தும், தரைமட்டமாகத் தகர்ந்துவிடும். அந்துப் பூச்சாலும், கரையான்களாலும் தின்னப்பட்டு, ஒடிந்து நொடுங்கிப்போன, பழைய தமிழ்ப்பனையோலைச் சுவடிகளைக் கண்டவர் எவரும், இப்பாட்டு, தலைமுறை தலைமுறை வழியாக, முந்தைய சுவடியிலிருந்து பார்த்து. படி எடுத்து எழுதப்பட்டு வந்தது அல்லது நினைவிலிருந்து எழுதப்பட்டு வந்தது