பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழர் வரலாறு

நூற்றாண்டின் இறுதியும், ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம்; அவன் ஆட்சியின் உச்ச காலம், சி. பி. 400.

அடிக்குறிப்பு :-

கரிகாலன் காலம் பற்றி நூலாசிரியர் கொள்ளும் முடிவு பற்றி, மொழிபெயர்ப்பாசிரியர் கருத்து. இவ்வதிகாரத்தின் ஓர் இணைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

கரிகாலன் : திரிலோசனப் பல்லவன் காலத்தவனா?

(இக்குறிப்பு, ஆந்திரப் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர். திரு. குண்டூர். கே. ஆர். சுப்பிரமணிய அய்யர் அவர்களால் தரப்பட்டது)

திரிலோசனப் பல்லவன் என்ற பெயருடைய அரசன் ஒருவன், தெலுங்கு நாட்டில், பண்டை நாட்களில் இருந்தான் எனக்கூறும், வலுவான, நிலையான பழங்கதைகள் உள்ளன. அவன், திரிநயனப் பல்லவன், முக்கண்டி பல்லவன், முக்கண்டிக் காடுவெட்டி என்னும், ஒரே பொருளுடைய சொற்களால் அழைக்கப்பட்டான். (M. E. R. 1908 Page; - 82, Also 109, 10, 153, 244 and 251 of 1893; and 293 of 1892 Nellore Inscriptions D, 69 K, g 24 and also 150 of 1899 and 837 of 1922) இப்பழங்கால அரசனைப் பற்றிக் கூறும் மிகப் பிற்பட்ட காலத்து ஆவணங்களாம், நன்கு தெரிந்த மக்கெனிஸ் (Mackenzie) கையெழுத்துப் படிகள் அல்லாமல், (Wilsonicatalogue Mss. Introd. P. P. ivii-ixii, Cl, cxix and also Taylor, Cat. of Mss. iii 486 Nellore -- manua 1436 687, See also. -fowlkes : Pallavas). பத்து பதினாறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவும், சிறிதே அறியப்பட்ட, ஆனால், நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய தகுதிவாய்ந்த இப்பேரரசின் வரலாற்று நிலையில், நம்மை, எந்த ஐயப்பாட்டு நிலைக்கும் கொண்டுபோய் நிறுத்தாதனவுமாகிய, கல்வெட்டுக்களும், இலக்கியக் குறிப்பீடுகளும் கூட உள்ளன. (கலிங்கத்துப் பரணி: See Chr. Coll, May, April,