பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

63

and July 1927 for the literary references in the articles, by Venkataramanayya, also T. G. Aravamudan's Kaveri and the Sangam Age)

திரிலோசனன், இன்றைய குண்டூர், கிருஷ்ணா, மற்றும் நெல் ஓரர் மாவட்டங்களோடு மட்டுமே, முக்கியமாகத் தொடர்பு கொண்டிருந்தான் ; ஆனால், சாளுக்கியர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தக்கணம் முழுவதற்கும், அவனை அரசனாக்கும் ஆவணங்களுக்கும் குறைவு இல்லை (Ep. Ind. 'vi. 147, 156) வெல நாடு (Ep. Ind. iv 34, 48) கொண்ட பத்மதி (M. E. R. 1, 16, Page, 136 Also146 of 1897 and 251 of 1893; Also Ep. Ind 111, 95) ஆகிய அரச இனங்கள், தங்களுடைய கல்வெட்டுக்களில், தங்கள் அரச இனங்களைத் தோற்றுவித்த தந்தையர்க்கு, அவர் அளித்த படைத்துணைக்கு ஈடாகச் சிறு சிறு நாடுகளை ஆளும் உரிமை வழங்கி ஆதரித்தமைக்குத், திரிலோசன பல்லவனுக்குத் தங்கள் நன்றியினைத் தெரிவிக்கின்றன. தெலுங்குச் சோழக் கல்வெட்டுக்கள், தங்கள் குல முன்னோன், காவிரிக்கரை புகழுக் கரிகாலன் புகழ் பாடாமல் தொடங்குவது மிக மிக அரிது. அதுபோலவே, தெலுங்குப் பல்லவக் கல்வெட்டுக்களும் (M.E.R. 19.18, 138, S: 1157) தங்கள் குல முதல்வன், புகழ்பெற்ற திரிலோசனனைக், “காடுவெட்டி” என்றும், “பிராமணர்களுக்குத் தானம் வழங்கி” என்று அழைக்க என்றும் தவறியதில்லை. திரிலோசனப் பல்லவன் மீது கரிகால் பெருவேந்தன் பெற்ற வெற்றியைத், தெலுங்குச் சோழக் கல்வெட்டுக்களில், பல குறிப்பிடாமல் விட்டுவிடுவதில்லை; பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன என்பது ஒருபுறம் இருப்பினும், கணக்கற்ற கல்வெட்டுக்கள், இயல்புக்கு மேலும் ஒரு கண்கொண்ட, ஒரு பழைய அரசனைக் குறிப்புடும் போது, அவை அனைத்தையும் பயனற்றவை என, எளிதாக அழித்து விடுவது இயலாது.

திரிலோசனன் செய்து முடித்த நிலையாய பணி, பாஞ்சாலத்து அஹிச்சத்திரத்திலிருந்து கொண்டுவத்து,