பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 தமிழர் வரலாறு

“வேந்து என்றோ, சோழர் குலப்பொதுப் பெயரால் கூறிப் படிப்பவரை மயக்கத்திற்கு உன்னாக்கியிருக்க மாட்டார்:

  மேலும் இமயத்தே புவி பொறித்தது, கடல் ஆடியது, ஆதிமந்தியின் தந்தையாயது ஆகிய நிகழ்ச்சிகளைத் தம் வாழ்நாள் காலத் துக்கு முந்திய நிகழ்ச்சிகளாகக் கூறிய இளங்கோவடிகனார், மாதவி அரங்கேற்ற நிகழ்ச்சி தம் காலத்துக்கு முந்தியனவாம் கரிகாலன் காலத்து நிகழ்ச்சி அன்று என்பதினாலேயே அந் திகழ்ச்சியைத் தம் கால திகழ்ச்சி யாகக் கூறியுள்ளார்.
  இம்மூவிடம் தவிர்த்து ஏனைய இடங்களில், சிலப்பதி காரச் சோழன், "சென்னி", "காவிரி நாடான்" ; "பெரு நிலம் முழுதாளும் பெருமகன்" ‘ ; "செம்பியன்"; "மன்னன்" ; "வேந்தன்”, "தமர்" , "உழைப்புலிக் கொடித்தேர் உரவோன்" என்பனபோலும் பெயர்களால் அழைக்கப் பட்டுள்ளான். இங்கெல்லாம், அச்சிலப்பதிகாரச் சோழன், கரிகாலன் என்றோ, திருமாவளவன் என்றோ சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளால் அழைக்கப்படவில்லை எனினும் உரையாசிரியர்கள், மங்கல வாழ்த்துப் பாடவில் வரும், "பெரு நிலம் முழுநாளு பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகள்" (31-32) என்ற தொடரில்வரும் "பெருநிலம் முழுநாளும் பெருமகன்" என்பதற்கும், அதே மங்கல வாழ்த்துப் பாடவில் வரும், "இப்பால் இமயத்து இருத்திய லான் வேங்கை உப்பாலைப் பொற்கோட்டு உழையதா, எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே’ (55-68) என்ற தொடரில் வரும் "செம்பியன்"

என்பதற்கும், அரங்கேற்றுக் காதை "தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை... சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி" (7.11 என்ற தொடரில் வரும் "மன்னன்" என்பதற்கும், இந்திரவிழவூர் எடுத்த காதையில், "இருநில மன்னற்கும் பெருவளம் காட்டத் திருமகள் புகுந்தது இச்செழும்பதி" என்ற தொடரில் (212-213) வரும் "இருநில மன்னன்" என்பதற்கும். நாடு காண்காதை, “உழைப் புலிக் கொடித்தேர் உரவோன்