பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 77

உப்பாலைப் பொற்கோட்டு உழையதா: எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே”

-மங்கல வாழ்த்துப் பாடல் : 63-68;

  ஆகவே, இவ்வரிகளில் இடம்பெற்றிருக்கும் “செம்பியன்" என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள், கரிகாலன் எனப் பொருள் கூறியிருப்பதும் பொருந்தாது. அவ்வாறு பொருள் கூறியது கொண்டு சிலப்பதிகாரக் காலத்தில் புகார் நகர் ஆண்டவன் கரிகாலன் எனக் கொள்வதும் பொருந்தாது.
  மேலும், உரையாசிரியர்கள் கரிகாலன் எனப் பொருள் கொள்வதற்குக் காரணமாக இருக்கும் "செம்பியன்"  என்ற. சொல் இடம் பெற்றிருக்கும், அம்மங்கல வாழ்த்துப் பாடல் வரிகள், அச்செம்பியன், கண்ணகி மணவிழா நிகழ்ந்தபோது புகார் நகர் ஆண்டவன் அல்லன் :

மாறாக, அம்மணவிழா காலத்திற்கு முற்பட்ட காலத்தே ஆண்டவன் என்பதையே உறுதி செய்கின்றன. "இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை உப்பாலைப் பொற்கோட்டு உழையதா" என்ற தொடர்க்கு இமயத்தின் இப்பதியில் பொறித்த புலிக்கொடி, அப்பாலும் நிற்குமாக’ என்பதே, பொருளாக, அந்நிகழ்ச்சி, கண்ணகி மணவிழா நிகழ்ச்சிக்கு முற்பட்ட காலத்தே நிகழ்ந்த ஒன்று என்பது உறுதியாவது காண்க. இமயத்தே பொறித்த என்னும் பொருள்தரும். ‘இமயத்து இருத்திய’ என்ற தொடரில் வரும், ‘ இருத்திய’ என்ற பெயரெச்சம் இறந்த காலப் பெயரெச்சமாய் அமைந்திருப்பதும், அந்நிகழ்ச்சி கடந்தகால நிகழ்ச்சி என்பதையே உறுதி செய்கிறது. ஆகவே, அது செய்தவனாக, இளங்கோவடிகளார் கூறும் “செம்பியன்",புகார் நகரைக் கடந்த காலத்தே காவல் புரிந்தவனேயல்லது, கண்ணகி திருமணம் நிகழ்ந்த காலத்துக் காவலன் அல்லன் என்பது தெளிவாம். . .

  மேலே கூறிய விளக்கங்களால், சிலப்பதிகார நூலாசிரியராகிய இளங்கோவடிகளார், கரிகால் வளவனை அறிந்தவர்