பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கரிகாலன்

85

அவன் செயல்களை விளக்கிக் கூறும், அந்நூல், பத்தினி வழிபாட்டு நெறியினை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது பற்றிய குறிப்பு எதையும் கூறவில்லை’ என்பது.

    செங்குட்டுவன் காலம், சமயப் பூசல் இல்லாச் சமரச சமய உணர்வு நிலை பெற்ற காலம். தமிழகத்துப் பேரூர்களில், பிறவாயாக்கைப் பெரியோன், ஆறுமுகச் செவ்வேள், வால்வளை மேனி வாலியோன், நீலமேனி நெடியோன் ஆகியோர்க்காம் கோயில்களோடு, அறவோர்பள்ளிகளும் ஒரு சேரக் கட்டியிருக்கும், சமயக் காழ்ப்பில்லா சமரச நிலையினைச் சிலப்பதிகாரம் உ ண ர் த் து வ து காண்க. சிலம்பு : 5 : 1.69 - 179 செங்குட்டுவன் குலவழி, சைவன் ; ஆயினும் திருமாலை வழிபட வெறுப்பவன் அல்லன் ; சிவன் முன் சிரம் தாழ்த்தித், திருமால் சேடத்தைப் புயத்தே தாங்கிக் கொள்ளும் அவன், கற்பு நிறை மகளிர்க்குக் கோயில் கட்டி வழிபாடாற்றும் மனப்பக்குவம் பெற்றிருந்தான். ஒரு தாய் வயிற்று மக்களே எனினும், மூத்தவன் செங்குட்டுவன் வைதீக நெறியினனாக, இளையவன் இளங்கோ, சமண நெறி ஏற்றான். அத்தகைய சமய ஒற்றுமையுணர்வு நிலவிய காலத்தவன் கஜவாகு, ஆகவே, பெளத்தனாகிய அவன் கண்ணகி வழிபாட்டு நெறியினை ஏற்றிருக்கமாட்டான் என்ற வாதத்தில் வலுவில்லை.
    மகாவம்சம், கஜபாகு கால நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தொகுத்துக் கூறிய வரலாற்றுத்தொகுப்பு நூல் என்று கூறிவிட முடியாது. அது ஒரு சிலவற்றை  கூறாமல் விட்டிருக்கவும் கூடும். மேலும், ஒன்று கூறப்பட வில்லை என்பதினாலேயே அது இல்லை என்ற முடிவுக்கு வருவது பொருந்தாவாதம் என்பதை, திரு. அய்யங்கார் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார். “இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அவ்வேதம் எழுதப்பட்ட காலத்தில் ஆலமரம் என்பதே இந்தியாவில் இல்லை என்ற வாதம் சரியானவாதம் ஆகாது எனத் திரு.