பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 89

                ஒன்பது குடிையும் ஒருபகல் ஒழித்து, அவன் 
                பொன்புனை திகிரி ஒரு வழிப் படுத்தோய்!’
                                           - சிலம்பு : 27 : 1.18.123

செங்குட்டுவன் நண்பனாகிய கயவாகு அச்செங்குட்டுவன் காலத்திலேயே, அவன் மைத்துனன் மீதே படையெடுத்துச் சென்றிருக்கமாட்டான். சோணாட்டில், செங்குட்டுவன் காலத்திலேயே எழுந்து, அவனால் அடக்கி வைக்கப்பட்ட ஆட்சி உரிமைப்போர், அவன் காலத்திற்குப் பின்னர் உரம் பெற்றிருக்கும் ஆதலின், அக்காலமே, அந் நாட்டின் மீது படையெடுப்பதற்கு வாய்ப்புடைய காலமாம் ஆதலின், கயவாகுவின் சோணாட்டுப் படையெடுப்பு, செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். அக்காலை, வஞ்சியில், செங்குட்டுவனால் தொடங்கப்பட்ட கண்ணகி வழிபாடு, அவள் பிறந்த மண்ணாம் சோணாட்டிலும் மேற் கொள்ளப் பட்டிருக்கக் கூடும். ஆக, செங்குட்டுவன் காலத் திற்குப் பின்னர்ச், சோணாட்டின் மீது படையெடுத்துச் சென்ற கயவாகு, ஆங்குப் பத்தினித் தெய்வத்தின் காலணியைக் கைக்கொண்டதில் வியப்பு இல்லை. ஆகவே, அச்செயல், செங்குட்டுவனைக் கயவாகுவின் காலத் தவன் எனக் கொள் வதற்குத் தடையாக நிற்கிறது என்பதில் நியாயம் இல்லை.

செங்குட்டுவனைக் கயவாகுவின் காலத்தவ னாகக் கொள்வதற்குத் தடையாக த், திரு. அய்யங்கார் எடுத்து வைக்கும் கடைசிவாதம், கயவாகு என்பதற்குப் பிறிதொரு பாடமாகக் காவல்’ என்பது சிலப்பதிகாரத்தில் கூறப் பட்டிருப்பது.

‘ கயவாகு காலத்தவன் என்ற முடிவு மேற்கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் கயவாகு என்ற சொல்லிற்குச் சிலப்பதிகாரத்தில் பிறிதொருபாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. அது, கயவா குவிற்குப் பதில் காவல்’ என்பதாம். “காவல்” என்பதே சரியான பாடமாயின், கயவாகுவின் ச1