28 இராகம் - சாவேரி கடமைப் பகுதி பாட்டு 36
தாளம். திஸ்ரசாப்பு, ஆதி உரிமை பெறுவோம் இதுவே நமது கடமை எனவே உணர்வாயே ! உலகில் இதனை இழந்தோர் மிருக நிலையே சதமாய் அடைவாரே! பெருமை யுடைய தமிழர் வழியில் பிறந்த மகனும் அலவோ நீ? பிழையை யுணர்ந்தே பழியை விலக்கப் பெரிது முயல்வாய் தமிழா நீ! வடவர் உனையே அடிமைப் படுத்தி வளத்தைச் சுரண்டிக் கொழுக்கின்றார்! வளரும் அறிவைக் கெடுக்க நிதமும் மடமை வளர்க்கத் துடிக்கின்றார்! கடமை யறிந்தே வறுமை தொலைய இடரும் விலக முயல்வாய் நீ! கருத்தில் தெளிவு பெறுவாய் எதிர்ப்பைக் கடக்கத் துணிவே அடைவாயே! எதிர்த்துத் தமிழை அடக்க நினைந்தோர் அடைந்த கதியை நினைவாயே! இதுநாள் முனைந்தார் பகைவர் எனினும் எழுச்சி யடையா திருக்கின்றாய்! கொதித்த உளத்தில் வரட்சிமிகுந்து குழப்ப நிலையே யடைந்தாயோ ! கொடுமை தவிர்க்க இனிதே முயல்வாய் குதித்தே எழுவாய் தமிழா நீ ! (உ)
- குறிப்பு :- ஒவ்வோரடியையும் ஷ இரண்டு தாளத்தி
லும் சேர்த்துப் பாடவேண்டும்.