பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் இன்பம்


I. மேடைப் பேச்சு

1. தமிழாசிரியர் மகாநாடு

தலைமை உரை

கல்வித்துறை அமைச்சர் அவர்களே! ஆசிரியத் தோழர்களே!

'கற்றாரைக் காண்பதுவும் நன்று; கற்றார் சொற் கேட்பதுவும் நன்று. கற்றாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ என்பர் நற்றமிழ் வல்லார். அந் நலத்தை இம் மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் எனக்குச் சிறப்பாகத் தந்த அன்பர்களை மனமாரப் போற்றுகிறேன்.

இம் மாநாட்டிலே தமிழ்த்தாயின் மணிக்கொடி ஏறக்கண்டேன்; மனம் களித்தேன். வில்லும் கயலும் வேங்கையும் தாங்கிய மணிக்கொடி, முத்தமிழ் வளர்த்த மூவேந்தரையும் நம் மனக் கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. அன்பர்களே! இன்று நாம் அனை வரும் அரசியல் வானத்தையே நோக்கி நிற்கின்றோம்.[1] சென்ற ஆண்டிலே விடி வெள்ளி தோன்றிற்று; இன்று


* 1-3-1946இல் சென்னையிலே நடைபெற்றது.
  1. மாநாடு நடந்தபோது அப்படி நின்றோம்.