பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ் இன்பம்



ஆருளே காட்சியளித்தது. "பட்டினத்துறை பல்லவனீச் சரம்” என்று அக்கோவிலைப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே, காவிரிப்பூம்பட்டினம் சோழர் ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய காலமே. சிலப்பதிகாரக் காலம். அது பதங்குலைந்து பல்லவர் ஆட்சியில் அமைந்த காலம். தேவாரக் காலம் என்பது தெளிவாகின்றது.

தமிழ் நாட்டில் பல்லவர் எப்போது அரசாண்டனர்? மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை அவர் ஆட்சி புரிந்தனர் என்று சரித்திரம் கூறும் சிவனடியார் பாடிய தேவாரத்திலும், திருமால் அடியார்களாகிய ஆழ்வார்களது திருப்பாசுரத்திலும் பல்லவர் குறிக்கப்படுகின்றனர். ஆனால், சிலப்பதிகாரத்தில் அம்மன்னரைப்பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆதலால், சிலப்பதிகாரம் எழுந்த காலம் பல்லவர் ஆட்சிக்கு முற்பட்ட காலம் என்று கொள்ளப்படுகின்றது.

தொன்று தொட்டுத் தமிழகத்தை ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர், பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்றிருந்த காலத்திலேதான் சிலப்பதிகாரம் பிறந்தது. விண்ணளாவி நிற்கும் இமயமலையில் சோழநாட்டுப் புலிக்கொடியை ஏற்றினான் கரிகாலசோழன். சேர நாட்டு அரசனாகிய நெடுஞ்சேரலாதன், 'தென்குமரி முதல் வட இமயம்வரை ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன் என்று புகழப்பெற்றான். அவனுடைய ஆணை இமயமலை யளவும் சென்றமையால் அவன், 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்' என்று தமிழ்நாட்டில் வழங்கப்பெற்றான். அவன் மகனே சேரன் செங்குட்டுவன். தந்தையின் புகழைத்