பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

93


தானும் பெற ஆசைப்பட்டுக் குட்டுவனும் வடநாட்டின் மீது படையெடுத்தான்; தமிழரசைப் பழித்துப் பேசிய வடநாட்டாரைப் போர்க்களத்திலே வாட்டி வென்றான்; இருவரைச் சிறை பிடித்தான்; தன் நாட்டிற்குக் கொண்டு வந்தான். கண்ணகித் தெய்வத்திற்கு அம் மன்னன் திருவிழா எடுத்தபோது அவ்விருவரும் உடனிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. எனவே, தமிழ்நாட்டாரின் வீரப்புகழ் வடநாட்டிலும் பரவியிருந்த காலம்; தமிழ்நாடு வாணிகத்தால் வளம்பெற்று ஓங்கி நின்ற காலம்; தமிழ்ப் புலவர் பல்லாயிரவர் தமிழ்த்தாய்க்குப் பல வகையான கவிதைக் கலன்களை அணிந்து கோலம் செய்து கொண்டிருந்த காலம்; அக்காலமே சிலப்பதிகாரத்தின் காலம்.