பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

109



கிணங்கி வந்தடைந்த தண்மதியைக் கண்டு உள்ளம் தழைத்தான்; தந்தையின் தோளில் ஏறியமர்ந்து கற்றைச் சடையின்மீது இலங்கிய குழவித் திங்களைத் தன் இளங்கரத்தால் வளைத்திழுத்தான். தண்மதியைச் சார்ந்த முருகனது இளநலம் முன்னரிலும் சிறந்து இலங்கிற்று. விண்மதியின் தண்மையையும் வெண்மையையுங்கண்டு, முருகன் மனங்களித்தான்; மதியின் வட்ட வடிவத்தைத் தன் முகத்தோடு ஒட்டிப் பார்த்தான்; அதன் மேனியிலமைந்த மறுவைத் தன் மலர்க் கரத்தால் துடைத்தான். மதியுடன் விளையாடிய மைந்தனைக் கண்டு தந்தையார் மனங் குளிர்ந்தார். இறையனார் செயல் கண்டு இன்பக் கண்ணிர் சொரிந்த முனிவர், 'யாவர்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?' என்று பாடிப் பரவினார்.