பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

135


நாகபந்தத்தை எடுத்துக்கொண்டு அரசூர் ஆனையப்ப பிள்ளையைக் காணச் சென்றார். அவர், தம் பங்காளிகளின்மீது தொடுத்திருந்த வழக்கு அவருக்குப் பாதகமாகத் தீர்ப்பான செய்தி அப்பொழுதுதான் தந்தியின் மூலமாக வந்திருந்தது. சாய்வு நாற்காலியில் சோர்ந்து சாய்ந்திருந்த பிள்ளையவர்களின் முன்னே நின்று கொண்டு,

"தந்தியொன்று வந்ததென்று
நொந்திருக்கும் வேளையில்
பந்தமொன்று தந்துநான்
வந்தனைபு ரிகுவேன்"

என்று கவிராயர் போட்ட போடு அவரைத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தந்திக்காரனைத் தலைவாசலில் கண்டு செய்தியறிந்துகொண்டு, கவிராயர் உள்ளே வந்தார் என்பதை அறியாத பிள்ளையவர்கள் ஆச்சரியப்பட்டு வணங்கி அவரை வரவேற்றார்; உபசரித்தார். காரியம் பலித்ததென்றெண்ணி, கவிராயர் பந்தத்தைக் கம்பீரமாகப் படித்துக் கொடுத்தார். பந்தப்பாட்டின் பொருளறியாத பிள்ளையவர்கள் காளியின் அருள் பெற்ற கவிராயரொடு பேசவும் அஞ்சி, ஐம்பது ரூபா சன்மானம் கொடுத்து, கோர்ட்டுச் செலவோடு செலவாய், 'பந்தச் செலவு ரூபா ஐம்பது' என்று எழுதிவிட்டார்.

காலஞ் செல்லச் செல்லக் கவிராயர் புகழ் ஏறிக் கொண்டே போயிற்று. அவருக்கு வயதும் நாற்பது நிறைந்தது. அவரது இருபத்தெட்டாம் வயதில் பிள்ளையிடம் சரமகவி பெற்றுக்கொண்டு தாயார் பரமபதம் அடைந்தாள்; பின்னும் ஐந்து ஆண்டுகளில்